RBI New Rules, Unclaimed Bank Money : வங்கிகளில் உரிமைகோரப்படாமல் இருக்கும் பணத்தை உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை, விழிப்புணர்வு பிரச்சாரத்தை ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளன. உரிமை கோரப்படாத பணம் என்பது ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி அல்லது நீங்களே கூட டெபாசிட் செய்த தொகைகளை மறந்து இருப்பீர்கள். இன்சூரன்ஸ் தொகைகள், மீட்சுவல் பண்டு தொகைகள் உங்கள் பெயரில் அல்லது உங்களின் குடும்பத்தாரின் பெயர்களில் வங்கிகளில் இருக்கலாம். அவற்றை வரும் டிசம்பர் மாதங்களுக்குள் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி இப்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்சாரம் "உங்கள் பணம் உங்கள் உரிமை" என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது. ஈரோட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு, வங்கியில் பத்து வருடங்களுக்கு மேலாக உரிமை கோரப்படாத வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைகள், மற்றும் இன்சூரன்ஸ் தொகைகள், மீட்சுவல் பண்டு தொகைகளை உரியவர்களிடம் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது ; வங்கியில் பத்து வருடங்களுக்கு மேலாக உரிமை கோரப்படாத வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைகள், மற்றும் இன்சூரன்ஸ் தொகைகள், மீட்சுவல் பண்டு தொகைகள் திரும்ப பெறும் முறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற உதவிகள் வழங்கபட்டது.
இம்முகாம் அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரை அணைத்து வங்கி, இன்சூரன்ஸ் அலுவலகம் போன்ற இடங்களில் தொடர்ந்து நடை பெறும். உரிமை கோரப்படாத தொகை என்பது வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கி கணக்கை 10 வருடங்களுக்கு மேலாக பயன் படுத்தாமல் இருந்தால், இன்சூரன்ஸ் தொகை ஏழு வருடங்களுக்கு மேலாக பயன் படுத்தாமல் இருந்தால் அந்த தொகையானது மத்திய அரசின் ரிசர்வு வங்கிக்கு மாற்ற படுகிறது. அவ்வாறு மாற்றப்பட்ட தொகை உரிய நபர்களிடம் அல்லது உரியவர் இறந்து போய் இருந்தால் அவர்களின் வாடிகையாளர்களிடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் இந்த முகாம் செயல்படுகிறது. இந்த அறிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
புதன்கிழமை நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் 72 வாடிக்கையாளர்களுக்கு ரூ.48 லட்சம் அளவு தொகை உரிய வாடிக்கையர்களிடம்
வழங்கினார். இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அண்மையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளிடம் சுமார் 1.84 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி மற்றும் சொத்துக்கள் தற்போது உரிமை கோரப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.
அந்த நிதியானது பொதுமக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தமானது என்றும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் உரிமையாளர்களிடம் வட்டியுடன் திரும்ப அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். எனவே, உரிமை கோரப்படாத நிதி மற்றும் சொத்துக்கள் என்றால் என்ன?, அவற்றை வாரிசுதாரர்கள் எப்படி விண்ணப்பித்து பெறுவது என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
உரிமை கோரப்படாத சொத்துக்கள் என்றால் என்ன?
வங்கி வைப்புத்தொகைகள், முதிர்ச்சி அடைந்த காப்பீட்டுக் கொள்கைகள், வருங்கால வைப்பு நிதி (PF), பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் டிவிடென்டுகள் போன்ற பல்வேறு நிதியச் சொத்துக்கள், உரிய காலத்துக்குள் உரிமை கோரப்படாமல் இருப்பது அல்லது கணக்கு விவரங்கள் காலாவதியானது போன்ற காரணங்களால் உரிமை கோரப்படாமல் இருக்கின்றன. இந்தக் குழப்பங்களைத் தீர்க்கவே இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத பணம் எங்கு சேர்கிறது?
ஒரு சொத்து நீண்ட காலத்திற்கு உரிமை கோரப்படாமல் இருந்தால், அது ஆரம்பத்தில் வைத்திருக்கும் நிறுவனத்திடமிருந்து ஒரு ஒழுங்குமுறைக் காப்பாளர் நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது.
வங்கி வைப்புத்தொகைகள்: வணிக வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் வைப்புத்தொகை, இந்திய ரிசர்வ் வங்கியின் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (DEA Fund) மாற்றப்படுகிறது.
பங்குகள் மற்றும் அதுபோன்ற சொத்துக்கள்: இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (SEBI) முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்றப்படுகிறது.
'உங்கள் பணம், உங்கள் உரிமை' பிரச்சாரத்தின் நோக்கம்
இந்தப் பிரச்சாரத்தின் முதன்மை நோக்கம், உரிமை கோரப்படாத நிதியை உரியவர்களிடம் சேர்ப்பதுதான். இதற்காக, விழிப்புணர்வு, அணுகல் மற்றும் நடவடிக்கை (Awareness, Access, and Action - 3 A's) ஆகிய மூன்று அம்சங்களில் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
விழிப்புணர்வு (Awareness): உங்கள் பணம் உரிமை கோரப்படாமல் உள்ளது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தி, அதை திரும்பப் பெற உதவுதல்.
வழிகளை ஏற்படுத்தும் அணுகுமுறை (Access): மக்கள் தங்கள் நிதியை எளிதாகத் தேடவும், கோரவும் உதவும் கருவிகள் மற்றும் வழிகளை வழங்குதல்.
நடவடிக்கை (Action): ஆவணங்களைப் பெற்ற பிறகு, உரிமை கோரும் செயல்முறையை விரைவாக முடித்து, பணத்தை உரிமையாளரிடம் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வது ஆகிய மூன்று வழிகளின் கீழ் இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட உள்ளது.
உங்கள் பணத்தை மீட்டெடுப்பது எப்படி? ரிசர்வ் வங்கியின் அறிவுரை
உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளைக் கண்டுபிடிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக ரிசர்வ் வங்கி (RBI) ஒரு சிறப்பு முயற்சியை எடுத்துள்ளது.
UDGAM போர்ட்டல்: ரிசர்வ் வங்கி UDGAM (Unclaimed Deposits Gateway To Access Information) என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் பல்வேறு வங்கிகளில் உள்ள தங்கள் உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை ஒரே இடத்தில் தேடி அறிய முடியும்.
சிறப்பு முகாம்கள்: ரிசர்வ் வங்கி அக்டோபர் முதல் டிசம்பர் 2025 வரை நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிமை கோரப்படாத சொத்துக்களுக்கான சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யவுள்ளது. பழைய அல்லது செயல்படாத கணக்குகளில் பணம் உள்ளவர்கள் இந்த முகாம்களில் அதிகாரிகளின் உதவியுடன் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
செயல்படாத கணக்கிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
ஒரு வங்கிக் கணக்கு இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது செயல்படாத கணக்காகக் கருதப்படும். 10 வருடங்களுக்குப் பிறகு பணம் DEA நிதிக்கு மாற்றப்பட்டாலும், அதைத் திரும்பப் பெறுவது எளிது.
வங்கி கிளையை அணுகவும்: உங்களின் பழைய கிளைக்கே செல்ல வேண்டியதில்லை, எந்த வங்கியின் கிளைக்கும் செல்லலாம்.
படிவத்தைப் பூர்த்தி செய்யவும்: உரிமை கோரும் படிவத்தை நிரப்பி, அதனுடன் உங்களின் KYC ஆவணங்கள், ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை இணைத்துச் சமர்ப்பிக்கவும்.
சரிபார்ப்பு: வங்கி உங்கள் ஆவணங்களைச் சரிபார்க்கும்.
பணத்தைப் பெறுதல்: சரிபார்ப்பு முடிந்ததும், வட்டியுடன் கூடிய உங்கள் பணம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்படும்.
பணத்தை இழந்ததாகக் கருதி கவலைப்படும் மக்கள், இந்தக் கோரப்படாத நிதியச் சொத்துக்கள் குறித்து விழிப்புணர்வு அடைந்து, அரசாங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி, தங்களுடைய கடின உழைப்பின் பணத்தை உடனடியாக மீட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | EPFO விதிகளில் மாற்றம்: இனி வேலை பொனால் உடனடியாக பணத்தை எடுக்க முடியாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









