UPS: 50% ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இன்னும் பல வித நன்மைகள்... எங்கே, எப்படி பதிவு செய்வது?

UPS Latest News: UPS -ஐத் சேர்வு செய்ய விருப்பம் உள்ள, தகுதியுள்ள ஊழியர்கள் Prote CRA இணையதளத்தில் உள்ள ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2025, 06:04 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி.
  • ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர யாருக்கெல்லாம் தகுதி உள்ளது?
  • NPS vs UPS முக்கிய வெறுபாடுகள் என்ன?
UPS: 50% ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இன்னும் பல வித நன்மைகள்... எங்கே, எப்படி பதிவு செய்வது?

Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான (UPS) வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தற்போது, ஏப்ரல் 1 ஆம் தேதி, தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மாற்று திட்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்தப் புதிய வழிகாட்டுதல்களின் கீழ், தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் இருவரும் UPS-க்கு மாற வேண்டுமானால், ஏப்ரல் 1 முதல் மூன்று மாதங்களுக்குள் அதற்கான தேர்வு செய்ய வேண்டும்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள் UPS -ஐ ஒரு முறை இதை தேர்வு செய்துவிட்டால், அதை மாற்ற முடியாது. இதை சேர்வு செய்ய விருப்பம் உள்ள தகுதியுள்ள ஊழியர்கள் Prote CRA இணையதளத்தில் காணப்படும் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 1, 2025 க்குப் பிறகு தங்கள் சேவையைத் தொடங்குபவர்களுக்கு, UPS மற்றும் NPS இடையே முடிவு செய்ய அவர்கள் சேர்ந்த தேதியிலிருந்து 30 நாட்கள் அவகாசம் இருக்கும். புதிய பணியாளர்களுக்கான இந்த காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பு

தேசிய ஓய்வூதிய முறையான NPS -ஐ நிறுத்திவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டு கொண்டு வர வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இரு முறைகளிலும் உள்ள முக்கிய அம்சங்களை இணைத்து, ஓய்வுக்குப் பிறகு 50% ஓய்வூதியத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஜனவரி 2024 இல் UPS செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. UPS-ஐத் தேர்ந்தெடுக்காத ஊழியர்கள் NPS-ஐத் தொடரலாம்.

அரசு ஊழியர்கள் இப்போது UPS மற்றும் NPS இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்

இந்தப் புதிய முயற்சி, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்ய ஊழியர்களை அனுமதிக்கிறது. இதனால் சுமார் 23 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். NPS ஜனவரி 1, 2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 24, 2024 அன்று UPS-ஐ அங்கீகரித்தது. முன்னதாக, பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை சம்பளத்தில் 50% க்கு சமமான ஓய்வூதியத்தை வழங்கியது. அதே பொன்ற நன்மை UPS -இலும் உள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர யாருக்கெல்லாம் தகுதி உள்ளது?

மத்திய அரசின் விதிகளின்படி, மூன்று வகை ஊழியர்கள் இதில் சேரலாம்: 

- ஏப்ரல் 1, 2025 வரை NPS -இல் இருக்கும் தற்போதைய ஊழியர்கள்
- ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசு பணிகளில் சேரும் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், மற்றும் 
- NPS -இன் கீழ் இருந்து மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெற்ற, தன்னார்வ ஓய்வு பெற்ற அல்லது அடிப்படை விதி 56 (j)-ன் கீழ் ஓய்வு பெற்ற ஓய்வு பெற்ற ஊழியர்கள். 

கூடுதலாக, ஒரு சந்தாதாரர் UPS -இல் சேருவதற்கு முன்பு இறந்துவிட்டால், அவர்களின் சட்டப்பூர்வ வாழ்க்கைத் துணை UPS திட்டத்தில் சேரலாம்.

UPS: இதில் பதிவு செய்வது எப்படி?

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை (UPS) பதிவு ஏப்ரல் 1, 2025 அன்று தொடங்கும். தகுதியான ஊழியர்கள் புரோட்டீன் CRA போர்டல் (https://npscra.nsdl.co.in) வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது படிவத்தைப் பயன்படுத்தி நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

NPS va UPS: முக்கிய வெறுபாடுகள் என்ன?

- NPS சந்தை அடிப்படையிலான முதலீட்டுத் திட்டமாகும், அதாவது இதன் வருமானம் சந்தை நிலையைப் பொறுத்தது. இதற்கு நேர்மாறாக, UPS உத்தரவாதமான ஓய்வூதியத் திட்டமாக உள்ளது.

- UPS -இல் முதலாளியின் (அரசு) பங்களிப்பு NPS ஐ விட அதிகமாக உள்ளது.

- NPS -இன் கீழ், பங்குகள், கடன் மற்றும் பிற சந்தை-இணைக்கப்பட்ட நிதிகளில் முதலீடு செய்யும் விருப்பம் கிடக்கும். UPS முக்கியமாக அரசாங்க பத்திரங்கள் மற்றும் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்கிறது.

மேலும் படிக்க | 7வது ஊதியக்குழு: இந்த வாரம் வரும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு... சம்பள உயர்வு இதுதான், நோட் பண்ணுங்க மக்களே

மேலும் படிக்க | EPF: பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம், EPFO அளிக்கும் 2 அட்டகாசமான பரிசுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News