மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) 2025 ஏப்ரல் 1ம் தேதி, முதல் அமல்படுத்தப்படும். ஓய்வூதியத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை முடித்தவுடன் ஊழியர்கள் உத்திரவாத ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். அதைத் தவிர, பணியாளருக்கு ஓய்வு பெறும்போது ஒரு மொத்தத் தொகையும் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) பதிலாக, UPS முறையை தேர்வு செய்யலாம். புதிய திட்டம் 2024 அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரியில் அமலாகும் தேதி உறுதிபடுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் NPS என்னும் தேசிய ஓய்வூதிய முறை ஆகியவற்றின் கலவையாகும். இதில் ஊழியர் உத்திரவாத ஓய்வூதியத்தைப் பெறும் அதே நேரத்தில், அவர்களின் சந்தையுடன்- இணைக்கப்பட்ட முதலீடுகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் தொகையைப் பெறலாம்.
ஓய்வூதியம் கணக்கிடப்படும் முறை
ஓய்வூதியம் கணக்கிடப்படும் முறையை ஒரு உதாரணத்தின் மூலம் அறிந்து கொள்வோம். ஓய்வு பெறும் ஊழியரின், கடைசி 12 மாத அடிப்படை சராசரி சம்பளம் ரூ.90,000 ஆகவும், அவரது சர்வீஸ் 26 ஆண்டுகளாகவும் உள்ள நிலையில், அந்த ஊழியருக்கு ஓய்வூதியம் என்னவாக இருக்கும் என்பது பற்றி மேலும் அறியலாம்.
தற்போதைய 53 சதவீத DA விகிதத்தில் ஓய்வூதியத் தொகை கணக்கிடப்படுள்ளது.
மொத்த ஓய்வூதியம் = (அடிப்படைத் தொகையில் 50 சதவீதத்தில் அடிப்படை + அகவிலைப்படியில் 50 சதவீதம்): ரூ. 68,850
குடும்ப ஓய்வூதியம் = முழு ஓய்வூதியத்தில் 60% = ரூ. 41,310.00
ஊழியர் எவ்வளவு மொத்தத் தொகையைப் பெறுவார்?
UPS மொத்தத் தொகையைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் (மாதாந்திர ஊதியத்தில் 1/10 பங்கு (ஓய்வூதியத்தில் அடிப்படை + DA) X சேவையின் போது, நிறைவு செய்த ஆறு மாத காலங்கள்)
சராசரி அடிப்படை ஊதியம் ரூ. 90,000, 26 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஊழியர் ஓய்வு பெறும்போது பெறும் மொத்த தொகை ரூ. 7,16,040 ஆக இருக்கும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் அம்சங்கள்
1. NPS கணக்கு வைத்திருப்பவர்கள் UPS முறைக்கு மாறலாம்.
2. மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் DA-வில் அதிகபட்சமாக 10 சதவீதம் முதலீடு செய்யலாம். அரசாங்கத்தின் பங்களிப்பு 18.5 சதவீதமாக இருக்கும். NPS திட்டத்தில், பங்களிப்பு14 சதவீதமாக இருந்தது.
3. ஊழியர் மற்றும் முதலாளியின் 10 சதவீத பங்களிப்பு சந்தை-இணைக்கப்பட்ட முதலீட்டிற்குச் செல்லும்.
4. அரசாங்கத்தின் 8.5 சதவீத பங்களிப்பு ஒரு தொகுப்பில் சேர்க்கப்படும். இது ஊழியருக்கு உறுதியான ஓய்வூதியத்தை வழங்கப் பயன்படுத்தப்படும்.
5. சந்தை-இணைக்கப்பட்ட முதலீடுகள் மோசமாக செயல்பட்டால், ஊழியரின் நிதி குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க முடியாவிட்டால், உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தின் இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் திரட்டப்பட்ட முதலீடுகளிலிருந்து நிதி திரட்டும்.
UPS திட்டத்தில் ஓய்வூதிய அடுக்குகள்
- குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை முடித்தவுடன் தொடக்க அடுக்கு ரூ.10,000 ஆகும்.
- ஓய்வு பெறுவதற்கு முன் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியின் (DA) 12 மாத சராசரியில் அதிகபட்சம் 50 சதவீதம் ஆகும். இருப்பினும், அதைப் பெற, ஒருவர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.
- 10 முதல் 25 வரை ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை ஆண்டுகள் உள்ள ஊழியர்களுக்கு சேவை ஆண்டுகளின் அடிப்படையில் விகிதாசார ஓய்வூதியம் கிடைக்கும்.
தனியார் துறை ஊழியர்கள் UPS திட்டத்தை தேர்வுசெய்ய முடியுமா?
புதிய ஓய்வூதிய திட்டம் இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்குத் மட்டுமே. மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது. இருப்பினும், தனியார் துறை ஊழியர்கள் UPS ஓய்வூதிய திட்டத்தில் இணைய இயலாது.
மேலும் படிக்க | UPS vs NPS: உங்களுக்கு ஏற்ற ஓய்வூதிய திட்டம் எது? முழுமையான ஒப்பீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









