UPS vs NPS: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.. முழு விவரம் இதோ

UPS Latest News: NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கும் UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? NPS-ஐத் தேர்ந்தெடுத்த ஒரு ஊழியர் UPS-க்கு மாற முடியுமா? யாருக்கு எது சிறந்தது? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2025, 09:52 PM IST
  • UPS-ஐத் தேர்வு செய்ய நிரப்ப வேண்டிய படிவங்கள் என்ன?
  • UPS இன் கீழ் PRAN என்றால் என்ன?
  • UPS-ன் கீழ் மொத்த தொகை செலுத்த அனுமதிக்கப்படுகிறதா?
UPS vs NPS: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்.. முழு விவரம் இதோ

Unified Pension Scheme: ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான வசதி கிடைத்துள்ளது. தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கவர் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் யுபிஎஸ் -ஐ தேர்வு செய்யலாம்.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ள கேள்விகள்

NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பிற்கும் UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? NPS-ஐத் தேர்ந்தெடுத்த ஒரு ஊழியர் UPS-க்கு மாற முடியுமா? யாருக்கு எது சிறந்தது? 

இந்த மாத தொடக்கத்தில் UPS நடைமுறைக்கு வந்தபோது மேலே உள்ள கேள்விகளுடன் இன்னும் பல கேள்விகள் மத்திய அரசு ஊழியர்களின் மனங்களில் இருந்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கான NPS-ன் கீழ் ஒரு விருப்பமாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட UPS ஏப்ரல் 1, 2025 அன்று நடைமுறைக்கு வந்தது. ஏப்ரல் 1, 2025 அன்று பணியில் இருக்கும், தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள எந்தவொரு மத்திய அரசு ஊழியரும் UPS-ஐத் தேர்வு செய்யத் தகுதியுடையவர் ஆகிறார்.

Retired Employees: ஓய்வு பெற்ற ஊழியர் UPS-க்கு தகுதியுடையவரா?

மார்ச் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வு பெற்ற, பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் NPS-ன் கீழ் உள்ள எந்தவொரு மத்திய அரசு ஊழியரும் UPS-க்கு மாறலாம். இறந்த சந்தாதாரரின் சட்டப்பூர்வமாக திருமணமான மனைவியும் UPS-க்கு தகுதியுடையவர்.

UPS-ஐத் தேர்வு செய்ய நிரப்ப வேண்டிய படிவங்கள் என்ன?

- ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் படிவம் A ஐ நிரப்ப வேண்டும். 
- UPS இன் கீழ் வர, தற்போது NPS இல் சந்தா செலுத்திய தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர் படிவம் A2 ஐ நிரப்ப வேண்டும். 
- படிவத்தை ஆன்லைனில் அல்லது நேரடியாக சந்தாதாரர் பணிபுரியும் அலுவலகத் தலைமை DDO விடம் சமர்ப்பிக்கலாம்.

UPS கால வரம்பு

மத்திய அரசு ஊழியர் ஏப்ரல் 1, 2025 முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசு பணிகளில் சேரும் பணியாளர்கள், மத்திய அரசு சேவைகளில் சேர்ந்த தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும். காலக்கெடுவிற்குள் NPS இன் கீழ் UPS விருப்பத்தைப் பயன்படுத்தாத தகுதியுள்ள நபர், UPS விருப்பம் இல்லாமல் தேசிய ஓய்வூதிய அமைப்பின் (National Pension System) NPS இன் கீழ் தொடரத் தேர்ந்தெடுத்ததாகக் கருதப்படுவார்.

UPS இன் விருப்பத்தை பின்னர் மாற்ற முடியுமா?

இல்லை, UPS ஐத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இறுதியானது. ஒருமுறை UPS -க்கு மாறினால், அதன் பின் அதை மீண்டும் மாற்ற முடியாதது.

UPS இன் கீழ் PRAN என்றால் என்ன?

நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் அல்லது PRAN என்பது UPS-ஐத் தேர்ந்தெடுக்கும் சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு எண்ணாகும். மேலும் அதன் கீழ் அனைத்து பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படுகின்றன.

UPS-ன் கீழ் மொத்த தொகை செலுத்த அனுமதிக்கப்படுகிறதா?

தகுதிவாய்ந்த சேவையின் ஒவ்வொரு 6 மாத காலத்திற்கும், கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கிற்கு (NPA மற்றும் DA உடன் சேர்த்து) சமமான மொத்த தொகை செலுத்தப்படுகிறது. மேலும், UPS சந்தாதாரர் தனிப்பட்ட கார்பஸில் 60% ஐ தாண்டாத தொகைக்கு அல்லது பெஞ்ச்மார்க் கார்பஸில் , எது குறைவாக இருந்தாலும், அந்த தொகைக்கு ஃபைனல் வித்ட்ராயல் விருப்பத்தைக் கொண்டிருப்பார்.

மேலும் படிக்க | நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம்

மேலும் படிக்க | இந்த நாள் முதல் இபிஎஃப் தொகையை ATM -இல் எடுக்கலாம், அமைச்சர் அளித்த சூப்பர் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News