மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் 2025 ஏப்ரல் 1ம் தேதி, முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (NPS) ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) மாறுபவர்களுக்கு, கடந்த 12 மாத சராசரி ஊதியத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியம் அளிக்கப்பட்ட போதிலும், பலர் இதில் இணைய இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் இரண்டு வாரங்களில், சுமார் 1,500 மத்திய அரசு ஊழியர்கள் UPS மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். NPS திட்டத்தில் தற்போது உள்ள 2.7 மில்லியன் மத்திய அரசு ஊழியர்களில் 0.05% மட்டுமே ஆகும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கான காலக்கெடு
UPS திட்டம் அமலபடுத்தப்பட்டு இரு வார காலம் தான் ஆகியுள்ளது. நிச்சயமாக, இவை ஆரம்ப காலகட்டம் தான். அதோடு, திட்டத்தில் சேருவதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை உள்ளது. இதனால் மாற்றம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு ஊழியர்கள் தயக்கம் காட்டுவதற்கான காரணிகளில், UPS திட்டத்தின் கீழ் மூலதன வருவாய் விருப்பம் இல்லாத நிலை, நீண்ட கால சர்வீஸ் தேவை மற்றும் NPS திட்டத்தில் கிடைக்கும் அதிக ஓய்வூதிய நிதி வசதி ஆகியவை அடங்கும். அரசு தேவைப்பட்டால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேருவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
UPS திட்டத்தில் உள்ள முக்கிய அமசங்கள்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையைத் தொடர்ந்து, OPS திட்டத்தை போன்ற அம்சங்களுடன் கூடிய UPS திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற பிறகு, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் (கடந்த 12 மாத சர்வீஸின் சராசரி அடிப்படை ஊதியம்) 50% உறுதியான ஓய்வூதியம் கிடைக்கும். மேலும், ஓய்வூதியம் பெறுபவரின் வாழ்க்கைத் துணைக்கு அவர்/அவள் இறந்த பிறகு, கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60% பென்ஷன் வழங்கப்படும். மேலும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையைக் கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 உத்திரவாத ஓய்வூதியம் கிடைக்கும்.
NPS திட்டத்தில் வரி விலக்குடன் திரும்பப் பெற அனுமதி
தற்போது நடைமுறையில் உள்ள NPS திட்ட விதிமுறைகளின்படி, சர்வீஸின் போது திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழியர்களின் பங்களிப்புகள் மூல சேர்ந்த NPS கார்பஸில் அதிகபட்சமாக 60% ஓய்வூதியத்தை, வரி விலக்குடன் ஓய்வு பெறும் போது திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. இதில் சந்தாதாரர் வழக்கமான ஓய்வூதியம் பெற ஆனியுட்டி திட்டத்தில் குறைந்தபட்சம் 40% கார்பஸை முதலீடு செய்ய வேண்டும்.
சந்தாதாரர்களுக்கு எந்த வகையான வருடாந்திர திட்டத்தை வாங்குவது என்பதைத் தேர்வுசெய்யும் உரிமை
தற்போதைய NPS கட்டமைப்பில், சந்தாதாரர்களுக்கு எந்த வகையான வருடாந்திர திட்டத்தை வாங்குவது என்பதைத் தேர்வுசெய்யும் உரிமை உள்ளது. இருப்பினும், UPS திட்டத்தில் அத்தகைய விருப்பங்கள் எதுவும் இல்லை. எனினும் UPS திட்டத்தில், பணியாளர் பங்களிப்பு 10% (அடிப்படை ஊதியம் + DA) என்ற அளவில் மாறாமல் இருக்கும். அரசாங்கத்தின் பங்களிப்பு தற்போதைய 14% இலிருந்து (சந்தையுடன் இணைக்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறையின் கீழ்) 18.5% ஆக அதிகரிக்கும்.
UPS திட்டத்தின் கீழ், ஓய்வூதிய நிதி இரண்டாகப் பிரிக்கப்படும்
முன்மொழியப்பட்ட UPS திட்டத்தின் கீழ், ஓய்வூதிய நிதி இரண்டாகப் பிரிக்கப்படும். முதல் பிரிவில், தனிப்பட்ட ஓய்வூதிய நிதிகள். இதில் பணியாளரின் மற்றும் பொருந்தக்கூடிய அரசாங்கத்தின் பங்களிப்பு தலா 10% (மொத்தம் 20%) வரவு வைக்கப்படும். மற்றொரு பிரிவில், 50% உத்தரவாத ஓய்வூதியத்தை வழங்க, கூடுதல் அரசாங்க பங்களிப்பிலிருந்து (அனைத்து ஊழியர்களின் அடிப்படை மற்றும் DA தொகையில் 8.5%) உருவாக்கப்பட்ட ஒரு தனி தொகுப்பு நிதி இருக்கும்.
NPS திட்டத்தின் மூலம் கிடைக்கும் அதிக கார்பஸ்
ஒரு அரசு சந்தாதாரர் UPS திட்டத்தின் கீழ் தனிநபர் கணக்கிலிருந்து (அடிப்படை ஊதியம் + DA வின் 20%) சேர்க்கப்பட்ட மொத்த தொகையில் ஓய்வுக்குப் பிறகு 60% வரை திரும்பப் பெற்றால், உத்தரவாதமான ஓய்வூதியத்தில் விகிதாசாரக் குறைப்பு இருக்கும். NPS விஷயத்தில், திரும்பப் பெறும் தொகை 60% ஆக இருக்கும் நிலையில், மீதமுள்ள 40% நிதியின் அளவு, சந்தாதாரரின் தனிப்பட்ட UPS கணக்கில் உள்ள 20% நிதியுடன் ஒப்பிடும்போது 24% (மத்திய அரசின் 14% + பணியாளர் 10%) மாதாந்திர பங்களிப்பிலிருந்து கட்டப்பட்டிருக்கும் NPS நிதி அதிகமாக இருக்கலாம்.
UPS திட்டத்தில் சேருவது குறித்த அரசு ஊழியர்களின் கருத்து
80 வயதுக்கு மேற்பட்ட ஆயுட்காலம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்ட வயதில் சேர்ந்தால், UPS சிறந்தது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இளம் வயதிலேயே அதில் சேர்ந்தால், நீண்ட கால அவகாசம் காரணமாக NPS திட்டத்தை தேர்ந்தெடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும், ஏனெனில் அது ஒரு பெரிய அளவில் நிதியை உருவாக்கும் என்று ஒரு மத்திய அரசு ஊழியர் கருத்து தெரிவித்தார். சில சந்தர்ப்பங்களில், கணவன்-மனைவி இருவரும் அரசுப் பணியில் இருந்தால், ஒருவர் UPS திட்டத்தையும், மற்றவர் NPS திட்டத்தில் இருக்கிறார் என்றும் மற்றொரு ஊழியர் கூறினார்.
மேலும் படிக்க | EPFO New Rules: PF கணக்கில் தனிப்பட்ட தகவல்களை திருத்தலாம்... எளிய வழிமுறை இதோ
மேலும் படிக்க | EPF Claim Settlement: செயல்முறையை எளிதாக்க EPFO எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









