UPS ஆரம்பம் ஆனது: 50% உத்தரவாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? முக்கிய அப்டேட்

UPS Latest News: UPS திட்டத்தின் கீழ் குறைந்தது 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு சமமான ஓய்வூதியத்தைப் பெறுவார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2025, 09:05 AM IST
  • UPS இன் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் எவ்வளவு?
  • 50 சதவீத ஓய்வூதிய உத்தரவாதம் யாருக்கு கிடைக்கும்?
  • குடும்ப ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?
UPS ஆரம்பம் ஆனது: 50% உத்தரவாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? முக்கிய அப்டேட்

Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட UPS, மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் உறுதியான ஓய்வூதியப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

UPS இன் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் எவ்வளவு? UPS -இன் கீழ் யாருக்கு  50 சதவீத ஓய்வூதிய உத்தரவாதம் கிடைக்கும்? குடும்ப ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம். 

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

மத்திய அரசு பணிகளில் உள்ள, ஏற்கனவே NPS-இல் சேர்ந்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் UPS-ஐத் தேர்வுசெய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது மட்டுமல்லாமல், யுபிஎஸ் திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.

Minimum Pension Guarantee: UPS இன் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் எவ்வளவு?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, பங்களிப்புகள் சரியான நேரத்தில் மற்றும் முறையாக டெபாசிட் செய்யப்பட்டு, பணம் எடுக்கப்படாவிட்டால், மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 10,000 உத்தரவாதமான ஊதியம் வழங்கப்படுகிறது.

50% Pension: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் 50 சதவீத ஓய்வூதிய உத்தரவாதம் யாருக்கு கிடைக்கும்?

UPS திட்டத்தின் கீழ் குறைந்தது 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு சமமான ஓய்வூதியத்தைப் பெறுவார். ஒரு ஊழியர் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருந்தால், அவருக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

Family Pension: UPS இன் கீழ் ஒரு குடும்ப ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும்?

பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியதாரர் இறந்தால், அவர் இறப்பதற்கு முன் பெறப்பட்ட தொகையில் 60 சதவீதம் சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

Central Government Employees: இந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது

மேலும், ஓய்வு பெற வேண்டிய தேதியிலிருந்து 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்கு முன்னர் ஓய்வு பெற்றாலும், பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS இன் கீழ் உறுதியான பணம் செலுத்தப்படமாட்டாது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA 2 வாரங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிவித்தது. "மார்ச் 19, 2025 தேதியிட்ட கெஜட் அறிவிப்பின் மூலம் PFRDA (NPS இன் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் செயல்பாட்டுமயமாக்கல்) விதிமுறைகள், 2025 ஐ வெளியிட்டுள்ளது" என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு அதிகரித்த வசதிகள்: வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்த EPFO

மேலும் படிக்க | பங்கு சந்தை சரிவால் கலக்கமா... அஞ்ச வேண்டாம்... நிபுணர்களின் SIP முதலீட்டு டிப்ஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News