மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 23 லட்சம் மத்திய ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பு அளிக்க அரசு தயாராகி வருகிறது. புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், குறைந்த பட்சம் 25 ஆண்டுகள் சர்வீஸ் கொண்ட மத்திய அரசு ஊழியர்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் UPS திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறத் தகுதியுடையவர்கள்.
குறைந்தபட்சம், மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம்
சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்தை விட நிலையான மற்றும் உத்திரவாத வருமானத்தை விரும்புபவர்களை கருத்தில் கொண்டு UPS திட்டம் தொடங்கப்படுகிறது. புதிய திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த, ஆனால் 25 ஆண்டுகளுக்கும் குறைவான ஊழியர்களுக்கு, குறைந்தபட்சம் மாதம், 10,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கான பதிவு மற்றும் கிளைம் படிவங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
யுபிஎஸ் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறையின் கலவை
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) ஆகிய இரண்டின் அம்சங்களையும் ஒருங்கிணைத்து, இத்திட்டம் ஒரு கலப்பின மாதிரியாக UPS வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், அவரது குடும்பத்தினர் இறுதி ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாகப் பெறுவார்கள். தற்போது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் UPS முறைக்கு மாறலாம்.
NPS திட்டத்தின் நிச்சயமற்ற வருமான தன்மை
NPS திட்டத்தில் நிலையான வருமானம் இல்லாமல் சந்தை அடிப்படையிலான வருமானத்தை வழங்கும். ஆனால், NPS போலல்லாமல், UPS உத்தரவாதமான ஓய்வூதியத் தொகையை உறுதி செய்கிறது. 2004 ஆம் ஆண்டில் OPS என்னும் பழைய ஊய்வூதிய முறைக்கு பதிலாக NPS திட்டம் கொண்டு வரப்பட்டது. OPS காலமுறை அகவிலைப்படி திருத்தங்களுடன் முழுமையான அரசு ஆதரவு பெற்ற ஓய்வூதிய திட்டமக இருந்தது. NPS திட்டத்தின் நிச்சயமற்ற வருமான தன்மை குறித்து அரசு ஊழியர்களிடையே அதிகரித்து வரும் கவலைகளை கருத்தில் கொண்டு UPS தொடங்கப்பட்டது.
உத்திரவாத வருமானம் தரும் ஓய்வூதிய முறை
பல அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, உத்திரவாத வருமானம் தரும் ஓய்வூதிய முறையைக் கோரினர். இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊழியர்களின் பாதுகாப்பை அவர்களின் நிதிப் பொறுப்புகளுடன் சமநிலைப்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேபோன்ற ஓய்வூதிய மாதிரிகளை மாநில அரசுகள் கொண்டு வரும் சாத்தியம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் சேவையில் இருப்பவர்கள் 50 சதவீத உத்தரவாத ஓய்வூதியத்தில் அதிகப் பயனடைவார்கள். ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை எதிர்பார்க்கும் ஊழியர்களுக்கு UPS திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். அதே நேரத்தில் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வருமானத்தை விரும்பும் பணியாளர்கள் அதிக வருமானம் பெற NPS திட்டத்தை விரும்பலாம்.
ஊழியர்களை 3 வகைகளாகப் பிரித்துள்ள PFRDA
கடந்த வாரம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) 2025ம் ஆண்டுக்கான NPS விதிமுறைகளின் கீழ் UPS திட்டத்தின் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த விதிமுறைகளில் மத்திய அரசு ஊழியர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
1. முதல் பிரிவில் ஏப்ரல் 1, 2025 வரை பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள். இவர்கள் NPS திட்டத்தின் கீழ் உள்ளவர்கள்.
2. இரண்டாவது பிரிவில், ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் மத்திய அரசுப் பணிகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் அடங்குவர்.
3. மூன்றாவது பிரிவில் NPS திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் மற்றும் மார்ச் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் (விருப்பு ஓய்வு பெற்றவர்கள் அல்லது அடிப்படை விதி 56(J) இன் கீழ் ஓய்வு பெற்றவர்கள்). UPS திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் ஊழியர் இறந்துவிட்டால், அவருடைய சட்டப்பூர்வ மனைவி UPS திட்டத்தில் சேரலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகை மத்திய அரசு ஊழியர்களுக்கான பதிவு மற்றும் க்ளெய்ம் படிவங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் https://npscra.nsdl.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கும்.
மேலும் படிக்க | UPS: உத்திரவாத ஓய்வூதியம் தரும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்... கணக்கிடப்படும் முறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ