)
Union Budget 2026-27: இன்னும் சில நாட்களில் அடுத்த பட்ஜெட் தாக்கல் பற்றிய பேச்சு தொடங்கிவிடும். இன்னும் மூன்று மாதங்களில், மோடி அரசு தனது மூன்றாவது பதவிக் காலத்தின் மூன்றாவது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதும், பல வித அறிவிப்புகள் வெளிவந்தாலும், வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளே பலரது கனவத்தை கவரும் அறிவிப்புகளாக இருக்கின்றன. குறிப்பாக தனிநபர் வருமான வரியில் அனைவருக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும், அரசாங்கம் தனது வரிக் கொள்கைகளை நாட்டின் பொருளாதார யதார்த்தங்களுடன் இணைத்து ஒத்திசக்க முயற்சிக்கிறது. மக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் நல நடவடிக்கைகளுக்குச் செலவிடுவதற்கும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் வரி முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது.
2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், நேரடி மற்றும் மறைமுக வரி கட்டமைப்பில் மாற்றங்கள் குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரிடமிருந்து நிதி அமைச்சகம் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது. விகித பகுப்பாய்வு மற்றும் இணக்க எளிமைப்படுத்தல் குறித்த திட்டங்களை அரசு கோரியுள்ளது.
வருவாய்த் துறையின் கீழ் உள்ள வரி ஆராய்ச்சி பிரிவு (TRU), அதன் வழக்கமான பட்ஜெட்டுக்கு முந்தைய அறிவிப்பில், பரிந்துரைகள் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் அமைச்சகத்தை சென்றடைய வேண்டும் என்று கூறியுள்ளது. திட்டங்களில் "பொருளாதார நியாயப்படுத்தல், தொடர்புடைய தரவு மற்றும் வருவாய் தாக்கங்கள்" ஆகியவை இருக்க வேண்டும் என்று இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமநிலையான மற்றும் சான்றுகள் சார்ந்த பட்ஜெட்டிற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
முறையான அழைப்பு தொழில்துறைக்கு விடுக்கப்பட்டிருந்தாலும், நாட்டின் கோடிக்கணக்கான வரி செலுத்துவோருக்கும் இந்த பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்புகள் உள்ளன. புதிய வருமான வரிச் சட்டம், 2025, ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். அதற்கு முன் தாக்கல் செய்யப்படப்போகும் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் முக்கியமானது.
வரி தொடர்பான சீர்திருத்தங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்த இரண்டு பட்ஜெட்டுகள் மிகவும் விதிவிலக்கானவையாக இருந்தன. குறிப்பாக புதிய வரி முறையின் கீழ் வரி இல்லாத வருமானத்திற்கான வரம்பை அரசாங்கம் ரூ.12 லட்சமாக உயர்த்திய கடைசி பட்ஜெட் - வரி செலுத்துவோர் பல தசாப்தங்களில் கண்டறியாத மிகப்பெரிய நிவாரணங்களில் ஒன்று. இதன் மூலம், புதிய வரி முறையின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பு ரூ.4 லட்சமாக அதிகரித்தது.
அதற்கு முன் 2024 யூனியன் பட்ஜெட்டில் (NDA மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ஜூலை பட்ஜெட்டில்), சில முக்கிய மாற்றங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது மூலதன ஆதாய வரிவிதிப்பு தொடர்பானது.
2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் புதிய வரி முறையின் கீழ் தனிநபர்களுக்கான சில முக்கிய மாற்றங்கள்:
- பிரிவு 87A இன் கீழ் தள்ளுபடிகளுக்குப் பிறகு ரூ.12 லட்சம் வரை வரி இல்லாத வருமானம்.
- ஆண்டு வருமானம் ரூ.24 லட்சம் வரை குறைந்த விகிதங்களுடன் திருத்தப்பட்ட வரி அடுக்குகள்.
- சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு ரூ.75,000 நிலையான விலக்கு.
- எளிமைப்படுத்தப்பட்ட வரி தாக்கல் மற்றும் ரீஃபண்ட் செயல்முறை.
இருப்பினும், பல சம்பளம் பெறும் வரி செலுத்துவோரால் இன்னும் விரும்பப்படும் பழைய வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பிரிவு 80C (ரூ.1.5 லட்சம்) அல்லது 80D (மருத்துவ காப்பீடு) இன் கீழ் பிரபலமான விலக்குகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆகையால், 2026-27 மத்திய பட்ஜெட்டிற்கான எதிர்பார்ப்புகள் இப்போது சமநிலை, கணிக்கக்கூடிய தன்மை மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு உண்மையான நிவாரணம், தேக்கமான விலக்கு வரம்புகளுடன் அதிகரித்து வரும் செலவுகளை சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
- பழைய வரி முறையில் சில நிவாரணங்கள்.
- புதிய வரிச் சட்டத்தின் கீழ் எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை மற்றும் ரீஃபண்டுகள்.
- வீடு வாங்குபவர்கள், மருத்துவச் செலவுகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிக விலக்குகள்
- மூலதன ஆதாய வரியில் பகுப்பாய்வு
- டிஜிட்டல் அசெட் வரிவிதிப்பதில் தெளிவு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வருமான வரிச் சட்டம், 2025, ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இது இந்தியாவின் 60 ஆண்டுகால வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தி நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- எளிமையான மொழி மற்றும் குறைவான பிரிவுகள் (800+ இலிருந்து சுமார் 500 ஆகக் குறைத்தது).
-"மதிப்பீட்டு ஆண்டு" "வரி ஆண்டு" என மாற்றம்.
- தாமதமான வருமான வரி தாக்கலுக்கும் ரீஃபண்ட் கிடைக்கும்.
- வீட்டுக் கடன் மற்றும் வாடகை வருமானத்திற்கான தற்போதைய விலக்குகளின் தொடர்ச்சி.
- டிஜிட்டல் மற்றும் உலகளாவிய வருமான அறிக்கையிடலுக்கான ஏற்பாடுகள்.
மத்திய பட்ஜெட் 2026-27 எதிர்பார்ப்புகள்: சுருக்கமாக....
- விகிதக் குறைப்புகள் மட்டுமல்லாமல் நியாயமான, எளிமையான மற்றும் வெளிப்படையான அமைப்பிற்கான தேவை.
- இரண்டு வரி முறைகளிலும் அதிக வரி இல்லாத வரம்பு அல்லது தள்ளுபடி
- எளிமையான தாக்கல் மற்றும் விரைவான ரீஃபண்ட்
- மருத்துவம் மற்றும் வீட்டுவசதியில் அதிக நிவாரணம்
- புதிய வருமான வரிச் சட்டம் 2025 வெளியீட்டிற்கான தெளிவான வரைபடம்
- கணிக்கக்கூடிய ஜிஎஸ்டி மற்றும் மறைமுக வரி அமைப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ