)
Central Government Likely To Increase LPG Gas Cylinder Price: இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகறிது. சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவர, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸதான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்து வருகிறது.
மாதந்தோறும் 1ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. இந்த விலை மாற்றம் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையில் அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தோடுட இருந்து வரும் நிலையில், 14 கிலோ எடை கொண்ட, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமில்லை.
தற்போதைய நிலவரப்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.868க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், தற்போது இல்லத்தரிசிகளுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல்க்ள வெளியாகி உள்ளது. அதாவது, 2026ஆம் ஆண்டு புத்தாண்டுக்குள் கேஸ் சிலிண்டர் விலை உயரக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானிய இழப்பால் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் நிதி ரீதியாக பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் தற்போது ரூ.53,700 கோடியாக உள்ளது.
செப்டம்பர் 2025 இறுதிக்குள் மொத்த இழப்புகள் ரூ.53,700 கோடியாக உள்ளன. இந்த நிறுவனங்கள் 12 சமமான மாதாந்திர தவணைகளில் அரசிடம் இருந்து ரூ.30,000 கோடி எல்பிஜி மானியத்தைப் பெற வாய்ப்புள்ளது. இந்த தவணைகள் நவம்பர் இறுதியில் தொடங்கும். மானிய விவரம் வெளியானவுடன் வருவாயாக பதிவு செய்யப்படும். இது இந்த நிறுவனங்களுக்கு நிவாரணத்தை அளிக்கும் என்றாலும், விலை உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது.
எல்பிஜி வாங்குவதற்கான செலவு சில்லறை விலையை விட அதிகமாக இருக்கும்போது ஏற்படும் இழப்பை மீட்டெடுக்க கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தலாம் என கூறப்படுகிறது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) எதிர்கொள்ளும் பெரும் நிதி இழப்புகளைக் கருத்தில் கொண்டு விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ONGC மற்றும் GAIL போன்ற மேல்நிலை நிறுவனங்கள் கூட தேவை மற்றும் உற்பத்தி இலக்குகளை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ.30,000 கோடி மானியம் ஓரளவு நிவாரணத்தை மட்டுமே அளிக்கும். இருப்பினும், நிறுவனங்களால் ஏற்படும் மொத்த இழப்பு ரூ.53,700 கோடி ஆகும். எனவே, ஈடுகட்ட 2026 புத்தாண்டுக்குள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயரக் கூடும் என சொல்லப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ