)
Pensioners Latest News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பணியாளர் அமைச்சகம் இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. இந்த விதிகள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுடன் தொடர்புடையவை. இந்தத் திட்டத்தின் கீழ், நியமனம் மற்றும் ஓய்வு பெறும் தேதிக்கு ஒரு வருடம் முன்பு அல்லது VRS-க்கு 3 மாதங்களுக்கு முன்பு NPS-ல் இருந்து UPS-க்கு மாறுவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, ஊழியர்கள் இன்னும் பல சலுகைகளைப் பெறுவார்கள்.
- ஊழியர்கள் ஓய்வு பெறும் தேதிக்கு ஒரு வருடம் முன்பும், VRS-க்கு 3 மாதங்களுக்கு முன்பும் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றலாம். அதாவது, அவர்கள் NPS-ல் இருந்து UPS-க்கு மாறலாம்.
- பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் இழப்பீடு, சேவையின் போது மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் பல சலுகைகள் என பல நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- பணி ஓய்வு தானாக எடுத்த முடிவாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ இருக்கலாம், முன்கூட்டியே அதைப் பெறுவதில் பல சலுகைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
- UPS-ஐத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள் ஓய்வூதியத்தைத் தவிர வேறு பல வசதிகளையும் பெறுவார்கள்.
- உதாரணமாக, ஒரு ஊழியர் பணியின் போது ஊனமுற்றால், ஊழியரும், ஏதேனும் காரணத்தால் இறந்தால், மரணத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினரும் CCS ஓய்வூதிய விதிகள் அல்லது UPS விதிகளின் கீழ் விருப்பத்தைத் தேர்வுசெய்ய உரிமை உண்டு.
- இது குடும்பம் பாதுகாப்பான ஓய்வூதியத்தின் பலனைப் பெற உதவும்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு ஊழியர் 25 ஆண்டுகளுக்குப் பதிலாக 20 ஆண்டுகளில் ஓய்வு பெற்றாலும், அவர் ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியும். இது ஊழியர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள ஒரு பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகின்றது.
UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்தது. அரசாங்கம் இதை NPS இன் ஒரு விருப்பமாக கொண்டு வந்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் ஊழியர்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதகாவும். இதனுடன், ஓய்வு பெறும் போது மொத்த தொகை மற்றும் பணிக்கொடையின் பலனையும் ஊழியர்கள் பெறுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ