UPS Deadline Extended: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. UPS காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரவாதமான ஓய்வூதியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு ஊழியர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, UPS விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் 3 மாதங்கள், அதாவது 2025 செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு UPS விருப்பம் வழங்கப்பட்டது. முன்னதாக,அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான காலக்கெடு ஜூன் 30, 2025 என நிர்ணயிக்கப்பட்டது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான அரசின் அறிக்கை
"பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை மனதில் கொண்டு, UPS விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் மூன்று மாதங்கள், 2025 செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது. இந்த நீட்டிப்பு தற்போதுள்ள தகுதியுள்ள ஊழியர்கள், முன்னாள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த முன்னாள் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு பொருந்தும்" என்று அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள், UPS இன் நன்மைகள் குறித்து ஊழியர்கள் மற்றும் சிவில் கணக்கு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் போது கடந்த 12 மாதங்களின் சராசரி சம்பளத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு ஊழியர்கள் UPS -இல் காட்டும் ஆர்வம் குறைந்துள்ளதால், இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் வேகமெடுத்துள்ளது.
NPS -இல் 27 லட்சம் அரசு ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
தற்போது, சுமார் 27 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் சந்தை இணைக்கப்பட்ட தேசிய ஓய்வூதிய முறையில் (NPS) சேர்க்கப்பட்டுள்ளனர். NPS மற்றும் UPS இடையேயான நன்மைகள் மற்றும் குறையபாடுகளுக்கான ஒப்பீட்டை மத்திய அரசு ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில் ஒரு முறை UPS விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதை மாற்ற முடியாது.
UPS -க்கான தேர்வு ஊழியர்களிடையே குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
பல ஊழியர்கள் இன்னும் UPS மற்றும் NPS இடையேயான வித்தியாசத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. எனவே அவர்கள் NPS -இலேயே தொடர விரும்புவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். UPS பணவீக்க விகிதத்துடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குகிறது, அதே சமயம் NPS அத்தகைய பலனைத் தருவதில்லை.
UPS-ல், குறைந்தது 25 வருட சேவையை முடித்த பிறகு ஓய்வு பெறும் ஊழியர்கள், கடைசி 12 மாத சேவையின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% தொகையை உத்தரவாத ஓய்வூதியமாகப் பெறுவார்கள். மேலும் அது பணவீக்க விகிதத்தின்படி முழுமையாகக் குறியிடப்படும்.
தற்போதைய NPS விதிகளின்படி, ஒருவர் ஓய்வு பெறும் நேரத்தில், தனது மொத்த திரட்டப்பட்ட NPS கார்பஸில் அதிகபட்சமாக 60% வரை வரி இல்லாமல் பணத்தை எடுக்கலாம். மீதமுள்ள குறைந்தபட்ச 40% வருடாந்திர தொகையில், அதாவது ஆனுவிட்டியில் முதலீடு செய்வது கட்டாயமாகும். இதனால் பணி ஓய்வுக்கு பிறகு வழக்கமான ஓய்வூதியம் பெற முடியும்.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: கிரேட் பே 1800-4200 ஊழியர்களுக்கான ஊதிய உயர்வின் முழுமையான கணக்கீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









