UPS Latest News: யுபிஎஸ் -இல் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன? இதில் சேர எந்த படிவத்தை நிரப்ப வேண்டும்? முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.

Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) UPS-ஐ செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் தொடங்கும். தகுதியுள்ள ஊழியர்கள் புரோட்டீன் CRA போர்டல் (https://npscra.nsdl.co.in) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஊழியர்கள் தங்கள் படிவங்களை நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள்
ஒரு ஊழியர் UPS-ஐத் தேர்ந்தெடுத்தவுடன், அவர் மீண்டும் NPS-க்குச் செல்ல முடியாது. யுபிஎஸ் மூலம் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தில், அரசாங்கத்தின் பங்களிப்பு மொத்த அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 18.5 சதவீதமாக அதிகரிக்கும். இது முன்னர் 14 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கு 10% தொடர்ந்து பங்களிப்பார்கள்.
யூபிஎஸ்: எந்தெந்த ஊழியர்கள் பலன் பெறுவார்கள்?
- ஏப்ரல் 1, 2025 வரை தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் வரும் ஊழியர்கள்.
- ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசு பணிகளில் சேரும் ஊழியர்கள்.
- முன்னதாக NPS இன் கீழ் இருந்து மார்ச் 31, 2025 க்குள் ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ ஓய்வு பெற்றவர்கள் அல்லது அடிப்படை விதி 56(j) இன் கீழ் ஓய்வு பெற்றவர்கள்.
- UPS திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு NPS சந்தாதாரர் இறந்துவிட்டால், அவரது சட்டப்பூர்வ மனைவி (திருமணமான மனைவி) UPS திட்டத்தில் சேரலாம்.
- UPS -இன் கீழ் ஓய்வூதியம் பெற, பணியாளர் குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
- ஊழியர் இறந்தால், பணியாளரின் குடும்பத்தினர், பணியாளர் பெறும் ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தைப் பெறுவார்கள்.
- 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
- பணியாளரின் சேவை 25 ஆண்டுகளுக்கு குறைவாகவும் 10 ஆண்டுகளுக்கு மேலும் இருந்தால், விகிதாசார ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை முடிவு செய்யப்படும்.
- NPS இன் கீழ் UPS விருப்பத்தைப் பயன்படுத்தும் பணியாளர்கள், ஓய்வுக்குப் பிறகு உட்பட, வேறு எந்த பாலிசி சலுகை, பாலிசி மாற்றம், நிதிப் பலன், பின்னர் ஓய்வு பெற்றவர்களுடன் சமமான சலுகைகள் போன்றவற்றைப் பெற உரிமை பெறமாட்டார்கள்.
- பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது அவர் ராஜினாமா செய்தாலோ, UPS -இன் கீழ் உறுதி செய்யப்பட்ட ஊதிய விருப்பம் கிடைக்காது.
UPS-ல் கிடைக்கும் பிரத்யேக பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்:
- உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவைக்கு பிறகு, ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம். இந்த ஊதியம் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை குறுகிய சேவை காலத்திற்கு விகிதாசாரமாக வழங்கப்படும்.
- உறுதி செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம்: இறப்பதற்கு முன் பணியாளர்கள் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம்.
- உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும்போது மாதத்திற்கு ரூ.10,000.
- பணவீக்க குறியீடு: உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், உறுதி செய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம். தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPE-IW) அடிப்படையாகக் கொண்ட அகவிலை நிவாரணம். ராணுவ வீரர்களைப் பொறுத்தவரை, பணிக்கொடையுடன் கூடுதலாக ஓய்வு பெறும் நேரத்தில் மொத்த தொகை, ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும், ஓய்வு பெறும் தேதியில் மாதாந்திர ஊதியத்தில் (ஊதியம் + DA) 1/10 பங்கு. இந்தக் கொடுப்பனவு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தின் அளவைக் குறைக்காது.
யார் எந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும்?
- தற்போதுள்ள ஊழியர்கள்: ஜனவரி 1, 2004 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள், NPS-ஐத் தேர்ந்தெடுத்தவர்கள் UPS-ஐத் தேர்வுசெய்யலாம். அவர்கள் படிவம் A2-ஐ நிரப்ப வேண்டும்.
- புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்: ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் ஊழியர்களும் இந்த விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். அவர்கள் படிவம் A1 ஐ நிரப்ப வேண்டும்.
- முன்னதாக ஓய்வு பெற்று NPS-ஐத் தேர்ந்தெடுத்த ஓய்வு பெற்ற பணியாளர்களும் UPS-இல் சேரலாம். அவர்கள் eKYC ஆவணங்களுடன் படிவம் B2-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
- ஊழியர் இறந்தால், சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைவர் eKYC ஆவணங்களுடன் படிவம் B6 ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
- தன்னார்வ ஓய்வுக்கு (VRS) 25 ஆண்டுகள் சேவைக்கான வழிவகை பொருந்தும். அத்தகைய ஊழியர்கள் 60 வயதை அடையும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ