Unified Pension Schme: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பல மாற்றங்கள் நிகழவுள்ளன. அவற்றில் முக்கியமானது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அமலாக்கம். கடந்த ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் செயல்பாட்டுக்கு வரும். UPS, மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியப் பாதுகாப்பை வழங்க முயல்கிறது. அரசு வேலையில் இருப்பவர்கள் மற்றும் ஏற்கனவே NPS இல் சேர்ந்துள்ளவர்கள் UPS ஐத் தேர்வு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS இன் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஊதியம் எவ்வளவு கிடைக்கும்?
10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த சேவைக்குப் பிறகு பணி ஓய்வு பெற்றால், பங்களிப்புகளை சரியான நேரத்தில் மற்றும் வழக்கமான முறையில் செய்திருந்து, பணத்தை இடையில் எடுக்காமல் இருந்தால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூ.10,000 குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஊதியத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும்.
Family Pension: UPS இன் கீழ் குடும்ப ஊதியம் எவ்வளவு கிடைக்கும்?
ஓய்வூதியத் தொகை பெறுபவர் ஓய்வு பெற்ற பிறகு இறந்தால், ஓய்வூதியத் தொகை பெறுபவருக்கு அவர் இறப்பதற்கு முன் அவருக்கு அனுமதிக்கப்பட்ட தொகையில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைக்கு இந்த தொகை வழங்கப்படும்.
எந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS இன் கீழ் உறுதி செய்யப்பட்ட ஊதியம் கிடைக்காது?
பின்வரும் சூழ்நிலைகளில் UPS இன் கீழ் உறுதி செய்யப்பட்ட ஊதியம் பெறும் விருப்பம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்காது:
- ஓய்வூதியத் தேதியிலிருந்து 10 ஆண்டுகள் தகுதி பெறுவதற்கு முன்பு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஊறுதிசெய்யப்பட ஓய்வூதியம் கிடைக்காது.
- பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் ராஜினாமா செய்த ஊழியர்களுக்கும் ஓய்வூதிய உத்தரவாதம் அளிக்கப்படாது.
Assured Pension: யாருக்கு உறுதியான ஓய்வூதியம் கிடைக்கும்?
NPS-ன் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள், UPS-க்கான விருப்பத்தைத் தேர்வு செய்பவர்கள், பின்வரும் அளவுகோல்களின்படி, UPS-ன் கீழ் உறுதியான ஊதியத்தைப் பெறத் தகுதியுடையவர்கள்:
- பணி ஓய்வு பெற்ற தேதியிலிருந்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை முடித்த பிறகு, ஓய்வு பெற்றவுடன் இதற்கான தகுதி கிடைக்கும்.
- FR 56 (j) விதிகளின் கீழ் ஓய்வு பெற்றால் (மத்திய சிவில் சர்வீசஸ் (வகைப்பாடு, கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1965 இன் கீழ் இது ஒரு அபராதம் அல்ல) அத்தகைய ஓய்வு பெற்ற தேதியிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கும்.
- குறைந்தபட்ச தகுதிவாய்ந்த சேவைக் காலமான 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னார்வ ஓய்வு பெற்றால், அந்த ஊழியர் சேவைக் காலம் தொடர்ந்து பணி ஓய்வு பெற்றிருந்தால், பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டிய தேதியிலிருந்து உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா? அதுவும் 75 சதவீதம் வரை தள்ளுபடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









