ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்... சில முக்கிய கேள்விகளும்... அதற்கான பதில்களும்

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது, NPS போன்ற பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், OPS போன்ற நிலையான ஓய்வூதியத்தின் பலனையும் வழங்குகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2025, 01:00 PM IST
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்.
  • UPS திட்டத்தின் கீழ் குடும்ப பென்ஷன் எவ்வளவு கிடைக்கும்?
  • UPS திட்டத்தின் கீழ் உத்திரவாத ஓய்வூதியத்தை பெற யார் தகுதியற்றவர்கள்?
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்... சில முக்கிய கேள்விகளும்... அதற்கான பதில்களும்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு யுபிஎஸ் என்னும் புதிய பென்ஷன் முறையை தேர்வு செய்வதற்கான தகுதி மற்றும் செயல்முறை முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டம் (யுபிஎஸ்) மற்றும் நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) இரண்டில் தாங்கள் விரும்பும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

Add Zee News as a Preferred Source

யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டம் (UPS) என்றால் என்ன?

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது, NPS போன்ற பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், OPS போன்ற நிலையான ஓய்வூதியத்தின் பலனையும் வழங்குகிறது. NPS உடன் ஒப்பிடும்போது UPS திட்டத்தில் ஓய்வு பெறுவதற்கு முன் கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் குறைந்தபட்ச உத்திரவாத ஓய்வூதியம் இதில் அடங்கும். இருப்பினும், OPS திட்டத்தில் கீழ், ஓய்வுக்குப் பிறகு, தங்கள் கடைசி சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பதிவு செய்யலாம்?

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாகும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கீழ்கண்ட வகைகளில் வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தும். 

1. தற்போதுள்ள ஊழியர்கள் - ஏப்ரல் 1, 2025 வரை தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் உள்ள பணியாளர்கள்.

2. புதிய பணியாளர்கள் - ஏப்ரல் 1, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசில் சேரும் ஊழியர்கள்.

3. ஓய்வு பெற்ற ஊழியர்கள் - NPS திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் மற்றும் மார்ச் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது அடிப்படை விதி 56(j) இன் கீழ் ஓய்வு பெற்றவர்கள்.

4. UPS திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் ஒரு சந்தாதாரர் இறந்துவிட்டால், அவருடைய சட்டப்பூர்வ மனைவி (திருமணமான மனைவி) UPS திட்டத்தில் சேரலாம்.

UPS திட்டத்தில் பதிவு செய்வது எப்படி?

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய அமைப்பில் (UPS) பதிவு செய்யும் செயல்முறை ஏப்ரல் 1, 2025 முதல் தொடங்கும். தகுதியுடைய பணியாளர்கள் புரோடீன் சிஆர்ஏ போர்ட்டல் (https://npscra.nsdl.co.in) மூலம் ஆன்லைனில் தங்கள் நியமனம் மற்றும் உரிமைகோரல் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

யுபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள வேறுபாடு? (NPS vs UPS)

NPS திட்டத்தின் உத்தரவாதமான ஓய்வூதியம் இல்லை. ஆனால், UPS திட்டத்தில் 25 வருட சேவைக்குப் பிறகு கடைசி சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். யுபிஎஸ்ஸில் 10 வருட சேவைக்குப் பிறகு, நீங்கள் ரூ. 10,000 உத்திரவாத ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள், அதேசமயம் என்பிஎஸ்ஸில் உத்திரவாத ஓய்வூதியம் இல்லை இல்லை.

OPS மற்றும் UPS இடையே உள்ள வேறுபாடு (OPS vs UPS)

பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலன்றி, யுபிஎஸ் என்பது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இதில் பணியாளர்கள் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (டிஏ) 10 சதவீதம் பங்களிக்க வேண்டும், அதே சமயம் மத்திய அரசு 18.5 சதவீதம் பங்களிக்கும். ஓய்வூதியத் தொகை சந்தையில் செய்யப்படும் முதலீடுகளின் வருமானத்தைப் பொறுத்தது. அவை பெரும்பாலும் அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

1. யுபிஎஸ் மூலம் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

2. என்பிஎஸ் போன்று, இந்த திட்டத்திலும் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும்.

3. அரசாங்கம் 18.5 சதவீதம் பங்களிக்கும். அதாவது இந்த திட்டத்தில் ஊழியர்கள் மற்றும் அரசாங்கத்தின் மொத்த பங்களிப்பு 28.5 சதவீதமாக இருக்கும்.

4. இத்திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.10,000 வழங்கப்படும்.

5. தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்த, அல்லது சேவையிலிருந்து நீக்கப்பட்ட அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது.

6. ஊழியர் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்.

7. சேவை காலம் 10 முதல் 25 ஆண்டுகள் வரை இருந்தால், விகிதாசார ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படும்.

UPS திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை திரும்பப் பெறுதல் அல்லது பகுதியளவு திரும்பப் பெறுதல் தொடர்பான விதிகள் என்ன?

பதிவுசெய்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் லாக்-இன் காலம் முடிந்த பிறகு, யுபிஎஸ் அல்லது என்பிஎஸ் திட்டத்தின் கீழ் உங்களின் சொந்த பங்களிப்புகளில் 25% வரை நீங்கள் திரும்பப் பெறலாம். இந்த திரும்பப் பெறுதலை அதிகபட்சம் 3 முறை மட்டுமே செய்ய முடியும்.

UPS திட்டத்தின் கீழ் உத்திரவாத ஓய்வூதியத்தை பெற யார் தகுதியற்றவர்கள்?

ஒரு ஊழியர் 10 வருட சேவைக்கு முன் ஓய்வு பெற்றாலோ அல்லது சேவையிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது அவர் ராஜினாமா செய்தாலோ, அவர் உறுதியளிக்கப்பட்ட கட்டணத்திற்குத் தகுதி பெறமாட்டார்.

UPS திட்டத்தின் கீழ் குடும்ப பென்ஷன் எவ்வளவு கிடைக்கும்?

யுபிஎஸ் சந்தாதாரர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு 60 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறப்பதற்கு முன் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம், அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். NPS திட்டத்தின், ஊழியர் இறந்த பிறகு குடும்பம் பெற வேண்டிய ஓய்வூதியத்தின் அளவு நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | UPS: உத்திரவாத ஓய்வூதியம் தரும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்... கணக்கிடப்படும் முறை

மேலும் படிக்க | தனியார் துறை ஊழியர்களுக்கு பம்பர் அப்டேட்: 9 மடங்கு அதிகரிக்கிறதா மாத ஓய்வூதியம்? புதிய அப்டேட்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: எதிர்பார்ப்பை விட அதிக ஊதிய உயர்வு.. யாருக்கு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News