UPS vs NPS vs OPS: 3 ஓய்வூதிய திட்டங்களிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளின் பட்டியல் இதோ

UPS vs NPS vs OPS: மூன்று ஓய்வூதியத் திட்டங்களுக்கு இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2025, 01:43 PM IST
  • 2004 இல் நிறுத்தப்பட்ட OPS, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான கோரிக்கை இன்றும் நாடு முழுவதும் உள்ளது.
  • 2004 இல் NPS அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அதன் பிறகு, புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு OPS நிறுத்தப்பட்டது.
UPS vs NPS vs OPS: 3 ஓய்வூதிய திட்டங்களிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளின் பட்டியல் இதோ

UPS vs NPS vs OPS: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம், ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும். தேசிய ஓய்வூதிய முறையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக முன்னர் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று ஊழியர்கள் கோரி வந்தனர். இந்த நிலையில், இந்த இரு ஓய்வூதிய முறைகளின் முக்கிய அம்சங்களையும் சேர்த்து மத்திய அரசு இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு உறுதியான ஓய்வூதியம்

மத்திய அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்வதற்கான விருப்பத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. UPS மூலம் மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு உறுதியான ஓய்வூதியத்தைப் பெற முடியும்.

தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பாதுகாக்கவும் நிதி சிக்கல்களை சமாளிக்க உதவவும், பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூட்திய அமைப்பு (NPS) என இரண்டு விருப்பங்கள் உள்ளன. விரைவில் அவர்களுக்கு UPS (ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்) எனப்படும் மற்றொரு விருப்பமும் கிடைக்கும்.

OPS vs NPS vs UPS: மூன்று ஓய்வூதியத் திட்டங்களுக்கு இடையில் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம்

2004 இல் நிறுத்தப்பட்ட OPS, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான கோரிக்கை இன்றும் நாடு முழுவதும் உள்ளது. மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் இதற்காக தொடர்ந்து போராடி வருகிறார்கள். 2004 க்கு முன்பு அரசு வேலைகளில் சேர்ந்த அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியப் பலன்களை பெறுகிறார்கள். 2004 இல் NPS அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, புதிதாகச் சேர்ந்தவர்களுக்கு OPS நிறுத்தப்பட்டது. இருப்பினும், டிசம்பர் 22, 2004 க்கு முன்பு பணிகளில் சேர்ந்தவர்களும் OPS இன் கீழ் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

National Pension System: தேசிய ஓய்வூதிய முறை

NPS என்பது எளிதில் அணுகக்கூடிய, குறைந்த செலவு கொண்ட, வரி சலுகைகளை உள்ளடக்கிய, நெகிழ்வான ஓய்வூதிய சேமிப்புக் கணக்காகும். NPS இன் கீழ், தனிநபர் தனது ஓய்வூதியக் கணக்கிற்கு பங்களிக்கிறார். இது தவிர, வேலை வழங்குநரும் தனிநபரின் சமூகப் பாதுகாப்பு/நலனுக்காக இணைந்து பங்களிக்க முடியும். தேசிய ஓய்வூதிய முறையில் ஓய்வூதியம் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் அதிக பணம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. NPS வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தாதாரர் தனது கணக்கில் பங்களிக்கிறார். இதன் மூலம் பெறப்படும் தொகை, ஊழியர் செய்த பங்களிப்பு மற்றும் அதை முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தைப் பொறுத்தது.

2004 க்குப் பிறகு மத்திய அரசு பணிகளில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களும் NPS இன் கீழ் உள்ளனர். இது 2009 இல் தனியார் துறை ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் NRI களை உள்ளடக்கி நீட்டிக்கப்பட்டது.
 
Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ், ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் கிடைக்கும். UPS நிதி அடிப்படையிலான கொடுப்பனவு முறையாகும். இது ஓய்வூதியதாரருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்க, ஊழியர் மற்றும் முதலாளி (மத்திய அரசு) இருவரிடமிருந்தும் பெறப்பட்ட பங்களிப்புகள் மற்றும் அதன் முதலிட்டை சார்ந்து உள்ளது. NPS சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வருமானம், பங்குகள் மற்றும் கடன் செயல்திறனைப் பொறுத்தது. ஆனால், UPS கடைசியாகப் பெற்ற சம்பளத்தின் அடிப்படையில் உறுதியான ஓய்வூதியத்தை வழங்குகிறது. NPS சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது, ஆனால் UPS குறைந்த ஆபத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் இதில் ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. NPS இன் தொகை முதலீடுகள் மூலம் திரட்டப்பட்ட கார்பஸைப் பொறுத்தது. மறுபுறம், UPS, 10 வருட சேவைக்குப் பிறகு மாதத்திற்கு ரூ. 10,000 குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தை அளிக்கின்றது. 

UPS Pension = (P/2) x (Q/300) x (IC/BC)

- P என்பது அடிப்படை ஊதியம் 
- Q என்பது சேவை காலம் (மாதங்களில்)
- IC என்பது தனிநபர் ஊதியம் 
- BC என்பது பெஞ்ச்மார்க் ஊதியம். 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் அதிரடி ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்: Goldman Sachs கணிப்பு இதோ

மேலும்  படிக்க | ஓய்வூதிய வயதில் மாற்றமா... மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News