New Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு புதிய ஓய்வூதியத் திட்டதை சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஒருங்கிணைந்த ஓய்வீதியத் திட்டம் என அழைக்கப்படும் இந்த திட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும். தேசிய ஓய்வூதிய முறையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக முன்னர் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே கொண்டு வர வேண்டும் என்று ஊழியர்கள் கோரி வந்த நிலையில், மத்திய அரசு இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள்
OPS, NPS மற்றும் UPS ஆகிய மூன்றும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS), தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவை எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம்
2004 இல் நிறுத்தப்பட்ட OPS அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான கோரிக்கை நாடு முழுவதும் தற்போது உள்ளது. மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் இதற்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதற்கு பதில் மத்திய அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருகிறது. தேசிய ஓய்வூதியத் அமைப்பின் கீழ் வரும் ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் விருப்பத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது, இந்தத் திட்டம் ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை
தேசிய ஓய்வூதிய முறையில் ஓய்வூதியம் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் அதிக பணம் பெற முடியும். ஆனால் அதே நேரத்தில் அதில் முதலீட்டு அபாயமும் உள்ளது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஊழியர்களின் பணத்திற்கு வட்டி கிடைக்கும். நாட்டில் ஓய்வூதியத் துறையை மேம்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் இந்திய அரசு அக்டோபர் 10, 2003 அன்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (PFRDA) நிறுவியது. தேசிய ஓய்வூதிய அமைப்பு ஜனவரி 1, 2004 முதல் தொடங்கப்பட்டது.
NPS துவக்கத்தில் அரசாங்க பணிகளில் புதிதாக சேருபவர்களுக்காக (ஆயுதப் படைகள் தவிர) அறிமுகப்படுத்தப்பட்டது. மே 1, 2009 முதல், அமைப்புசாரா துறை ஊழியர்கள் உட்பட நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தன்னார்வ முதலீட்டு திட்டமாக NPS வழங்கப்படுகிறது.
Unified Pension System: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ், ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் கிடைக்கும். இது ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளது, ஆனால் ஒருவர் NPS இலிருந்து UPS க்கு மாறுவதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்தவுடன், NPS க்கு மீண்டும் வர முடியாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். UPS-ல் ஓய்வூதியத்தைக் கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது. இந்த சூத்திரத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் தனது ஓய்வூதியத்தைக் கணக்கிடலாம்.
UPS Pension = (P/2) x (Q/300) x (IC/BC)
- இங்கு P என்பது அடிப்படை ஊதியம்
- Q என்பது சேவை காலம் (மாதங்களில்)
- IC என்பது தனிநபர் ஊதியம்
- BC என்பது பெஞ்ச்மார்க் ஊதியம்.
எனினும், ஒரு பணியாளருக்கு 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை மீதமுள்ள நிலையில் மட்டுமே இந்த சூத்திரத்தைப் பயன்படுத்த முடியும். மீதமுள்ள சேவைக்காலம் 25 ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், அதற்கான விகிதத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும். பணியாளர் 25 ஆண்டுகள் சேவைக்காலத்திற்கு முன்பு தன்னார்வ ஓய்வு பெற்றால், ஓய்வூதியம் உண்மையான பணிஓய்வு தேதியிலிருந்து தொடங்கும்.
மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் FB கணக்கு, ஈமெயில் எல்லாம் வருமான வரித்துறை வசம்... ஏமிரா இதி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









