)
Urban Company: வீட்டை சுத்தம் செய்வது முதல் மேனிக்யூர் வரை, ஏசி ரிப்பேர் முதல் பூச்சி மருந்து அடிப்பது வரை, இன்றைய காலகட்டத்தில் ஒரு வேலையை செய்ய ஆள் தேவை என்றால், உடனடியாக நம் அனைவரின் மனதிலும் வரும் பெயர் 'அர்பன் கம்பெனி'. 3 நண்பர்கள் கண்ட கனவால் தோன்றிய இந்த நிறுவனம் இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறையில் வரலாறு படைத்துள்ளது.
சமீபத்தில் பங்குச்சந்தையில் நுழைந்த அர்பன் கம்பெனி பலரை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. நிறுவனத்தின் ₹1,900 கோடி ரூபாய் மதிப்பிலான IPO (ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு) முதலீட்டாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இது 103 முறை அதிகமாக சப்ஸ்க்ரைப் செய்யப்பட்டது.
அர்பன் கம்பெனியின் பங்கு ஒதுக்கீடு செப்டம்பர் 15, 2025 அன்று நிறைவடைந்தது. இது செப்டம்பர் 17 அன்று NSE மற்றும் BSE இல் லிஸ்ட் ஆனது. முதல் நாளே நிறுவனத்தின் பங்குகள் நேர்மறையான போக்கை பற்றிக்கொண்டன. பங்கின் விலை ₹103 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அது NSE இல் ₹162.25 ஆகவும் BSE இல் ₹161 ஆகவும் ஓப்பன் ஆனது. அதாவது முதலீட்டாளர்கள் இதன் மூலம் தோராயமாக 57% குறிப்பிடத்தக்க பிரீமியத்தைப் பெற்றனர்.
இரண்டாவது நாளான இன்று, வியாழக்கிழமை, BSE-யில் அர்பன் கம்பெனியின் பங்குகள் 4% வரை உயர்ந்து ரூ.174 ஆக உயர்ந்தன. அர்பன் கம்பனி பங்குகள் இரண்டு நாட்கள் வர்த்தகத்தில் அதன் IPO வெளியீட்டு விலையான ரூ.103 ஐ விட கிட்டத்தட்ட 69% லாபம் ஈட்டியுள்ளன. இது கூர்மையான ஒரு ஏற்றமாகும். இந்த ஓட்டம், பிளாக்பஸ்டர் லிஸ்டிங்கிற்கு பிறகு, இந்த பங்கை லாபத்தில் விற்பதா அல்லது நீண்ட காலத்திற்கு முதலீடாக தொடர்வதா என்ற குழப்பத்தில் முதலீட்டாளர்களை தள்ளியுள்ளது.
அர்பன் கம்பெனி நிறுவனத்தின் இந்த வெற்றி, இந்த நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்த IPOவில் 45.8 மில்லியன் புதிய பங்குகள் மற்றும் 138.6 மில்லியன் (OFS) பங்குகள் அடங்கும். இந்த IPO (ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு) மூலம் ₹472.24 கோடி ரூபாய் புதிய மூலதனத்தை ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அர்பன் கம்பெனியின் கதை, அபிராஜ் சிங் பால் (CEO), வருண் கைதன் (COO) மற்றும் ராகவ் சந்திரா (CTPO) ஆகிய மூன்று நண்பர்களின் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த மூவரும் சேர்ந்து ஒரு கனவு கண்டனர், அதை நிறைவேற்ற அயராது உழைத்தனர், கனவு நிஜமாகும் வரை முயற்சி செய்துகொண்டே இருந்தனர். இருப்பினும், வெற்றிக்கான அவர்களது பாதை எளிதானதாக இருக்கவில்லை.
அபிராஜும் வருணும் ஐஐடி கான்பூரில் படித்தனர். அபிராஜ் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார், பிசிஜியில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் வருண் அமெரிக்காவில் குவால்காம் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பெற்றிருந்தார். இருவரும் பல ஸ்டார்ட்அப்களைத் தொடங்கினர், ஆனால் எதிலும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.
மறுபுறம், ராகவ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்றார். அவர் Buggi என்ற டாக்ஸி சேவையைத் தொடங்கினார். அது தோல்வியடைந்தது. ஆனால் இந்த மூவரும் விடாமுயற்சியுடன் 2014 இல் அர்பன் கம்பெனி என்ற நிறுவனத்தை நிறுவினர். இது முதலில் UrbanClap என்ற பெயரில் இயங்கியது.
- அர்பன் கம்பெனி ஒரு யூனிகார்னாக, அதாவது அதிவேக வளர்ச்சி அடையும் ஸ்டார்ட் அப்பாக மாறியது ஒரு அற்புதமான பயணம்.
- 2014 இல் குருகிராமில் அர்பன் கம்பெனி தொடங்கப்பட்டது.
- ஏப்ரல் 2015 இல், நிறுவனத்துக்கு ₹12 கோடி சீட் ஃபண்டிங்க் கிடைத்தது. இது நிறுவனத்தின் உறுதியை மேலும் அதிகரித்தது.
- ஜனவரி 2016 இல், நிறுவனம் வீட்டு சேவை நிறுவனமான HandyHome -ஐ கையகப்படுத்தியது.
- பின்னர், நவம்பர் 2018 இல், அர்பன் கம்பனி ₹375 கோடிக்கான தொடர் டி நிதியை பெற்றது.
- இதற்குப் பிறகு, அர்பன் கம்பெனி அடுத்த நிலைக்கு சென்றது.
- ஏப்ரல் 2021 இல், நிறுவனம் ₹7,500 கோடி மதிப்பீட்டில் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது.
- இன்று, அதன் மதிப்பீடு கிட்டத்தட்ட ₹24,000 கோடியை எட்டியுள்ளது.
இன்று, அர்பன் கம்பெனி இந்தியாவில் மட்டும் தன் சேவைகளை நிறுத்திக்கொள்ளவில்லை. இது நான்கு நாடுகளில், 59 நகரங்களில் தனது சேவைகளை வழங்குகிறது. நிறுவனத்தில் 48,000 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். 1.3 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இது சேவை செய்துள்ளது. அர்பன் கம்பனியின் மிகவும் பிரபலமான சேவைகளில் பிளம்பிங் வேலைகள், எலக்ட்ரிக்கல் பணிகள், பெயிண்டிங், மசாஜ், சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு, விட்டை சுத்தம் செய்வது, பெஸ்ட் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ