)
Tamil Nadu government gold appraiser training : தமிழ்நாடு அரசு சார்பில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் தரம் அறிவது குறித்த பயிற்சியை அளிக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று அரசு சான்றிதழ் பெறுபவர்களுக்கு கூட்டுறவுத்துறை வங்கிகளில் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம். இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் தவறவிடாதீர்கள். கூடுதல் விவரங்களுக்கு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும். இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான், விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate), ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும். மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள், தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.
அரசு வேலை பெறும் வாய்ப்பு
பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பெறும் நடைமுறைகள், அரசுத் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்வதற்கான தகுதிகள்
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு www.editn.in அல்லது 9543773337 / 9360221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) தொடர்புகொள்ளலாம். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.
முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ