)
உலகின் மிக பிரபலமான பங்குச் சந்தை முதலீட்டாளர் மற்றும் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட், பங்கு சந்தையில் செய்த அரசாட்சியும், முதலீடு செய்யும் கடைபிடிக்கும் உத்தியும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும், கடைபிடிக்கப்படும் ஒன்றாக உள்ளது என்றால் மிகையில்லை. இவரது உத்தியை கடைபிடிப்பதால், கோடீஸ்வரர் ஆகும் கனவை எளிதாக நிறைவேற்றலாம்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், வாரன் பஃபெட் எந்த பங்கில் முதலீடு செய்துள்ளார் என்பதை கவனித்து அதை கடைப்பிடிப்பார்கள். ஏனெனில் அவர் முதலீடு செய்த நிறுவன பங்குகள் ஏறிக்கொண்டே இருக்கும். பலர் அவரது ஆலோசனைகளை பின்பற்றி பெரும் பணக்காரர்களாக ஆகி உள்ளனர்.
முதலீட்டில் ஆயிரங்களை பல கோடிகளாக பெருக்க உதவும் வெற்றி மந்திரம்
நீண்ட கால முதலீடு அவசியம்
பங்குச்சந்தையில் பொறுமை அவசியம். குறுகிய காலத்தில் லாபம் ஏற்றுவது சாத்தியமல்ல. முதலீடு பன்மடங்காக வளர கால அவகாசம் கொடுக்க வேண்டியது மிக அவசியம். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிய முதலீடுகளில், அந்த கால முதலீடு வியக்கத்தக்க வகையில் ஆபத்தை கொடுக்கும் என்பதை, சமீபத்திய தரவுகள் பல எடுத்துக்காட்டுகின்றன.
நிறுவனத்தின் கடன்களை கவனத்தில் கொள்ளுதல்
ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வதற்கு முன்னால், அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு கடன் உள்ளது என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கடன் குறைவாக இருந்தால், அந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதே நேரத்தில் கடன் அதிகமாக இருந்தால், நிறுவனம் நெருக்கடி நிலையை எந்த நேரத்திலும் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
பங்கின் மதிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் பங்குகள் விலையை பார்த்து முதலீடு செய்வது தவறு. அதிக விலை கொண்ட பங்குகள் அதிக வருமானம் தரும் எனக் கூற இயலாது. ஒரு நிறுவன பங்கின் மதிப்பு அதன் செயல்திறன் ஆகியவற்றைப் பார்த்து முதலீடு செய்வதால், முதலீட்டிற்கான நல்லரட்டான் கிடைக்கும்.
பங்குச் சந்தை சரிவு கொடுக்கும் வாய்ப்பு
பொதுவாக, பங்குச்சந்தை விழும் போது பலர் அச்சத்துடன் பங்குகளை விற்க ஆரம்பிப்பார்கள். இது மிகவும் தவறு. பங்குகள் சரியும்போது தான் முதலீடு அதிகம் செய்ய வேண்டும். இதனால் லாபத்தை அல்லலாம்.
முதலீடுகளை ஒரே இடத்தில் செய்யக்கூடாது
முதலீடுகளை பல்வகைப்படுத்துதல் என்றுமே சிறந்த உத்தியாக கருதப்படுகிறது. இதனால் ஒன்றில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், மற்றொன்றில் கிடைக்கும் வருமானம் அதை சரி செய்து விடும். முதலீடு செய்யும், சந்தையை நன்றாக ஆராய்ந்து, சிறந்த முதலீட்டாளர்களின் ஆலோசனைகளை பெற்று முதலீடு செய்வது என்றுமே நல்லது. ஏனெனில் பங்குச்சந்தை என்பது ரிஸ்க் அதிகம் கொண்ட ஒரு முதலீடு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ