இன்று 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை சுமார் ரூ.62 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கியின் உள்நாட்டு பணப் பரிமாற்றத்திற்கான (DMT) புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகள் வங்கி செயல்முறைகளில் மோசடிகளைத் தடுப்பதையும் இவை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
நவம்பர் 1 முதல், பாதுகாப்பற்ற எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான நிதிக் கட்டணம் மாதத்திற்கு 3.75% ஆக உயரும். ரூ50,000 -க்கு மேல் யூட்டிலிட்டி பில் செலுத்தும் போது 1% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
நவம்பர் 1 முதல் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பு இருந்தது போல, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்ய முடியாது. 60 நாட்களுக்கு முன்னர்தான் முன்பதிவு செய்ய முடியும். ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை இந்த விதி பாதிக்காது.
நவம்பர் 1 முதல் தொலைத்தொடர்பு துறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. ஸ்பேமை நிறுத்த மெசேஜ் டிராக்கிங்கை செயல்படுத்துமாறு ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
SEBI புதிய விதிகளின் கீழ் நவம்பர் 1 முதல், AMC -கள், தங்கள் நாமினிகள் அல்லது உறவினர்கள் மூலம் செய்யப்படும் ரூ.15 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளைப் பற்றி இணக்க அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, பல்வேறு மாநிலங்களில் வார விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக நவம்பர் மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.