இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய தகவல். அதிக EPS ஓய்வூதியம் கோரும் ஊழியர்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.
செப்டம்பர் 1, 2014 அன்றோ அல்லது அதற்கு முன்போ அவர்கள் EPS உறுப்பினர்களாக இருந்தார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
உண்மையான சம்பளத்தில் EPF பங்களிப்புகள் செய்யப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நிறுவனங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு விருப்பப் படிவங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
சம்பளம் மற்றும் EPF பங்களிப்புப் பதிவுகளைத் தயாராக வைத்திருப்பது நல்லது.
இதற்கிடையில் குறைந்தபட்ச மாத இபிஎஸ் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது.
தற்போது குறைந்தபட்ச EPS ஓய்வூதியத் தொகை ரூ.1,000 ஆக உள்ளது. இந்தத் தொகை சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.
உடனடியாக இபிஎஃப் ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஊழியர் அமைப்புகள் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.