இந்த பட்ஜெட் குறித்து பலதரப்பட்ட மக்களுக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.

';

நிர்மலா சீதாராமன்

ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

';

பட்ஜெட் 2024

இந்த பட்ஜெட் குறித்து பலதரப்பட்ட மக்களுக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.

';

நிலையான விலக்கு

புதிய வரி விதிப்பின் கீழ் கிடைக்கும் ரூ.50,000 நிலையான விலக்கு வரம்பை ரூ.75,000 ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

';

வரி விலக்கு

வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு வரம்பை ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை உள்ளது.

';

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள், 8வது ஊதியக்குழு, டிஏ அரியர், டிஏ உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

';

PM KISAN

PM KISAN திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை ரூ.6000 -இலிருந்து ரூ.12,000 ஆக அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது.

';

அடல் ஓய்வூதியத் திட்டம்

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் அதிகபட்ச தொகையை ரூ.5,000 -இலிருந்து அரசு ரூ.10,000 ஆக அதிகரிக்கலாம்.

';

மூத்த குடிமக்கள்

கொரோனா தொற்றுக்கு முன்னர் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. அதை இந்த பட்ஜெட்டில் அரசு மீண்டும் கொண்டு வரக்கூடும் என நம்பப்படுகின்றது,

';

வீட்டுக்கடன்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான வரி விலக்கு 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story