PF சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் பல வகையான ஓய்வூதியங்கள்: முழு லிஸ்ட் இதோ

Sripriya Sambathkumar
Oct 04,2024
';

சூப்பரானுவேஷன்

ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்து அவரது வயது 58 ஆக இருந்தால், அவர் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. பணியாளர் விரும்பினால், அவர் தனது ஓய்வூதியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் பெறலாம்.

';

முன்கூட்டிய ஓய்வூதியம்

பணியாளர் விரும்பினால், அவர் 58 வயதுக்கு முன்பே ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம். எனினும், ஒரு ஊழியரின் வயது 50 -க்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

';

ஊனமுற்றோர் ஓய்வூதியம்

இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றால் (நிரந்தர அல்லது தற்காலிகமாக) ஊனமுற்றோர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார்.

';

விதவை மற்றும் குழந்தைகள் ஓய்வூதியம்

இறந்த EPFO ​​உறுப்பினரின் வாழ்க்கைத் துணைக்கும் இறந்த EPFO ​​உறுப்பினரின் இரண்டு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் இந்த ஓய்வூதியம் கிடைக்கிறது.

';

அனாதை ஓய்வூதியம்

ஊழியர் இறந்து, அவருக்கு வாழ்க்கைத் துணை இல்லை என்றாலோ, அல்லது, அவரும் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தலோ, ஊழியரின் குழந்தைகளுக்கு 25 வயது முடியும் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

';

நாமினி ஓய்வூதியம்

EPF உறுப்பினர் தனது மரணத்திற்கு பிறகு ஓய்வூதியம் பெற யாரையாவது நாமினியாக பரிந்துரைத்திருந்தால், அந்த நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

';

சார்ந்திருக்கும் பெற்றோருக்கு ஓய்வூதியம்

இபிஎஃப் உறுப்பினர் இறந்து, ​​குடும்ப உறுப்பினர்களும் (மனைவி, குழந்தைகள்), நாமினியும் இல்லாத நிலையில், சார்ந்திருக்கும் பெற்றோருக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. EPF குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

';

VIEW ALL

Read Next Story