உலக கேம்கள் எல்லாம் இந்தியாவில் களமிறங்கப்போகுது! ஏன் தெரியுமா?

S.Karthikeyan
Mar 25,2024
';


ரோபஸ்ட் ஃபண்டமெண்டல் டூ பவர் கன்டினியூட் குரோத்” (Robust Fundamentals to Power Continued Growth) என்ற தலைப்பில் சமீபத்திய அறிக்கையானது உலகளாவிய கேமிங் அரங்கில் இந்தியாவை தற்போதைய சாம்பியனாக வெளிப்படுத்தியுள்ளது.

';


2023 ஆம் ஆண்டில் 568 மில்லியன் கேமர்கள் மற்றும் 9.5 பில்லியனுக்கும் அதிகமான கேமிங் ஆப் பதிவிறக்கங்களுடன், இந்தியா உலகளவில் மிகப்பெரிய கேமிங் சந்தையாக மாறியிருக்கிறது.

';


மொபைல் கேமிங் சந்தையில் 90% பங்களிப்பு செய்வதால், மொபைல் கேம் பதிவிறக்கங்களின் அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற கேமிங் ஜாம்பவான்களை இந்தியா மிஞ்சிகிறது. இது உலகின் மொத்தத்தில் சுமார் 20 சதவீதம் ஆகும்.

';


உள்ளூர் மொழிகள் மூலம், கேமிங் தளங்கள் அறிமுகப்படுத்துவதால் கிராமப்புறங்களில் தங்கள் லிமிட்டை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளன.

';


மேலும், இந்தியாவில் கேமிங் மக்கள்தொகையில் சுமார் 40% பெண்களைக் கொண்டுள்ளது என்று அறிக்கை தெரியப்படுத்துகிறது. மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

';


பெண் விளையாட்டாளர்களின் இந்த எழுச்சி, சாதாரண மற்றும் ஹைபர்கேஷுவல் கேமிங் அனுபவங்களுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது என்றும் கூறலாம்.

';


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் ஐந்து கேமிங் விளையாட்டாளர்களில் ஒருவர் மட்டுமே பெண் மட்டுமே. இந்தியாவில் உள்ள கேமிங் மக்கள் தொகையில் சுமார் 20% பேர் பணம் செலுத்தும் பயனர்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

';


இந்திய விளையாட்டாளர்களின் வளரும் விருப்பங்களையும், செலவுப் பழக்கத்தையும் பிரதிபலிக்கிறது. உலகளாவிய கேமிங் அதிகார மையமாக, சந்தையாக இந்தியா முன்னேறி வருவதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது.

';


கேமிங் புரட்சியின் முன்னணியில் இந்தியா நிற்கிறது. வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு தயாராக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story