EPF -இல் முதலீடு செய்வதால் கிடைக்கும் சில முக்கியமான பிரத்யேக நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
ஒரு நிதியாண்டில் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான பங்களிப்புக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும்.
இந்த வசதி பழைய வரி முறையின் கீழ் உள்ள வரி செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது.
12 சதவீத பங்களிப்பு வரை, EPF பங்களிப்பு மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லை.
உங்கள் சம்பள அடுக்கு எதுவாக இருந்தாலும், மெச்யூரிட்டி தொகைக்கு எந்த வரியையும் செலுத்த வேண்டாம் என்பது EPF இன் சிறந்த பலன்களில் ஒன்று.
EPF ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது.
சந்தாதாரர் அகால மரணமடைந்தால், EPFO குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குகிறது.
EPF -வில் ஓய்வு பெறும் வயது அல்லது 10 வருட சேவைக்காலம் என்ற லாக்-இன் காலம் உள்ளது, ஆனால் வீடு கட்டுதல், நோய் சிகிச்சை, உயர் கல்வி ஆகியவற்றுக்கு கணக்கில் உள்ள பணத்தை எடுக்க EPFO அனுமதிக்கிறது.