மத்திய அறங்காவலர் குழு (CBT), EPFO வின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும்.
CBT -இன் அடுத்த வாரியக் கூட்டம் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தில் EPFO 3.0 பற்றிய சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த கூட்டத்தில் EPFO 3.0 -வின் கீழ், ATM மூலம் பிஎஃப் பணம் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
அவசர காலங்களில் EPFO உறுப்பினர்களுக்கு நிதியை விரைவாக அணுக ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி அளிக்கப்படும்.
UPI உடன் பிஎஃப் கணக்கு இணைக்கப்பட்டு கட்டணங்கள் எளிதாக்கப்படும்
பிஎஃப் கணக்கை PhonePe, Google Pay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளுடன் இணைக்கலாம்.
க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறை எளிதாகும். கணக்கு புதுப்பிப்புகள் இனி வேகமாக இருக்கும்.