EPFO அதிரடி அறிவிப்பு: ஊழியர்களுக்கு அடித்தது லாட்டரி

Sripriya Sambathkumar
Nov 01,2023
';

இபிஎஃப்ஓ

மாதா மாதம் பிஎஃப் தொகைக்கு பங்களிக்கும் நபரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி உள்ளது.

';

அறிவிப்பு

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் கூடிய விரைவில் ஒரு ஜாக்பாட் அறிவிப்பு வரவுள்ளாது.

';

வட்டித்தொகை

இன்னும் சில நாட்களில் மத்திய அரசு வட்டிப் பணத்தை பிஎஃப் ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கவுள்ளது. இது ஊழியர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும். சில மாதங்களுக்கு முன், 8.15 சதவீத வட்டி தருவதாக அரசு அறிவித்தது.

';

எப்படி பார்ப்பது?

பிஎஃப் வட்டி தொகையை அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைத்தவுடன் அது தங்கள் கணக்கில் வந்துவிட்டதா என்பதை ஊழியர்கள் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டில் இருந்தபடியே இந்த வழிகளில் தெரிந்துகொள்ளலாம்.

';

உமங் செயலி

பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம்.

';

இபிஎஃப்ஓ இணையதளம்

EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்று உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

';

மிஸ்டு கால்

மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

';

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்பது மொழியை குறிக்கும்.

';

VIEW ALL

Read Next Story