EPFO Higher Pension: சூப்பரான புதிய அப்டேட் வந்தது

';

EPFO உயர் ஓய்வூதியம்

EPFO உயர் ஓய்வூதியம் (EPFO Higher Pension) தொடர்பான பணிகளை செய்து முடிக்க முதலாளிகள் / நிறுவனங்களுக்கான கடைசி தேதியை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

';

காலக்கெடு நீட்டிப்பு

இப்போது முதலாளிகள் அதாவது நிறுவனங்கள் 31 டிசம்பர் 2023 வரை ஊழியர்களின் சம்பள மற்றும் கொடுப்பனவு விவரங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

';

முந்தைய காலக்கெடு

முன்னதாக, உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டுப் படிவத்தை சரிபார்ப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2023 வரை இருந்தது.

';

கோரிக்கை

பல முதலாளிகள் / நிறுவனங்கள் கூட்டு விருப்பப் படிவத்தை சரிபார்க்க காலக்கெடுவை நீட்டிக்குமாறு தொழிலாளர் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர்

';

கோரிக்கைக்கான காரணம்

இபிஎஃப்ஓ இணையதளத்தில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும், விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பு விவரங்களைப் பெறுவதிலும் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்த முதலாளிகள் / நிறுவனங்கள், இதன் காரணமாக கூட்டு விருப்பப் படிவத்தை விரைவாக தாக்கல் செய்ய முடியவில்லை என்று கூறினர்.

';

நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள்

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைச் சரிபார்ப்பதற்காக (வெரிஃபை செய்வதற்காக) செப்டம்பர் 29, 2023 வரை 5.52 லட்சம் விண்ணப்பங்கள் முதலாளிகள் / நிறுவனங்களிடம் நிலுவையில் இருந்தன.

';

EPFO ​​எடுத்த முடிவு

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த பிறகு, EPFO ​​வாரியத்தின் தலைவர், முதலாளிகள் சம்பள விவரங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்தார்.

';

VIEW ALL

Read Next Story