EPFO புதிய திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து முறையே ஜூன் 29 அன்று அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
கட்டாய EPF பங்களிப்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. உறுப்பினர்கள் எப்போதும் மாதத்திற்கு ரூ. 15,000 என்ற சட்டப்பூர்வ ஊதிய வரம்பில் 12% பங்களிப்பார்கள்.
புதிய விதியின் கீழ் PF பிடித்தம் என்பது ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் அமையும்.
ஊழியர்களின் கட்டாயப் பங்களிப்பு மற்றும் விருப்பத்தின் பேரில் செய்யப்படும் பங்களிப்பு ஆகிய இரண்டுக்கும் இடையேயான உள்ள தெளிவான வேறுபாடே புதிய திட்டத்தில் உள்ள மிகப்பெரிய மாற்றமாகும்.
புதிய EPFO விதிகளின்படி, தகுதியான பிஎஃப் கோரிக்கைகளுக்கு வெறும் மூன்று நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
EPF புதிய திட்டம், பகுதியளவு பணம் எடுக்கும் விதிகளை மூன்று பரந்த பிரிவுகளாகப் பிரித்துள்ளது. இது செயல்முறையை எளிதாக்குகிறது.
ஊழியர்களும், நிறுவனமும் பரஸ்பர ஒப்புதலுடன், உண்மையான அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் (அல்லது அதைவிட அதிகமாகவும்) பிஎஃப் பங்களிப்புகளைத் தொடர்ந்து செலுத்தலாம்.
இந்தப் புதிய கட்டமைப்பு வருங்கால வைப்பு நிதிக்கான தற்போதைய பங்களிப்பு விகிதங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.