PF கணக்கில் வட்டித்தொகை வந்துவிட்டதா? செக் செய்வது எப்படி?

';

இபிஎஃப் உறுப்பினர்கள்

இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கணக்கில் 8.25% ஆண்டு வட்டித் தொகையை டெபாசிட் செய்யும் செயல்முறை தொடங்கிவிட்டது. இபிஎஃப் சந்தாதாரர்கள் நீண்ட நாட்களாக இந்த நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள்.

';

இபிஎஃப் கணக்கு

வட்டித் தொகையை டெபாசிட் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைத்து கணக்குகளிலும் அது வரவு வைக்கப்படும் என்றும் EPFO ​​தெரிவித்துள்ளது. இந்த செயல்முறை முடிந்த பிறகு, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) முழு வட்டித் தொகையையும் காண முடியும்.

';

இபிஎஃப் இருப்பு

சில எளிய வழிகளில் இபிஎஃப் கணக்கில் உள்ள இபிஎஃப் இருப்பை (EPF Balance) செக் செய்யலாம், அவற்றை பற்றி இங்கே காணலான்.

';

இணையதளம்

இபிஎஃப்ஓ -வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (EPFO Website) சென்று பிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் தொகையை செக் செய்யலாம்.

';

உமங் செயலி

பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் போன்களில் உமங் செயலி (UMANG App) மூலமும் பிஎஃப் இருப்பை செக் செய்யலாம்.

';

மிஸ்டு கால்

011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் (Missed Call) கொடுத்தும் பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கு இருப்பை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

';

எஸ்எம்எஸ்

7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG (தமிழுக்கு EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும்) என்று எழுதி SMS அனுப்பியும், பிஎஃப் தொகை பற்றிய தகவலை பெற முடியும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு EPFO -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.

';

VIEW ALL

Read Next Story