இந்தியா அதிக அளவில் சமையல் எண்ணெயையும் தங்கத்தையும் இறக்குமதி செய்கிறது. ரூபாய் பலவீனமடையும் போது, இவற்றின் விலையும் உயர்ந்து குடும்ப பட்ஜெட்டைப் பாதிக்கும்.
வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் மற்றும் தங்கும் செலவு அதிகரிக்கும். முன்பு ஒரு டாலருக்கு ரூ.80 செலுத்திய இடத்தில், இப்போது ரூ.85 அல்லது அதற்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும். இதன் விளைவாக நீங்கள் வாங்கிய வீடு, கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான EMI அதிகரிக்கும்.
வெளிநாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தொழில் நடத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து, லாபம் குறையும்.