பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானம் காரணமாக முதலீடுகளுக்கு நிலையான வைப்புகளை FDயை இந்தியர்கள் விரும்புகிறார்கள், ஆனால் சிறந்த வட்டி விகிதங்களைக் கண்டறிவது சவாலான ஒன்றாக உள்ளது.
1 வருட FDயில் குறிப்பிட்ட இந்த மக்களுக்கு ஏதுவான வட்டி விகிதத்தை வழங்கும் 7 வங்கிகள்.
பஞ்சாப் நேஷனல் வங்கி பொதுக் குடிமக்களுக்கு 6.85% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.35% 1 வருட வைப்புத்தொகையில் அக்டோபர் 1 முதல் PNB வழங்குகிறது.
கனரா வங்கி ஜூன் 11 முதல் ஒரு வருட டெபாசிட்டுகளுக்கு 6.85% மற்றும் 7.35% என்ற நிலையான வைப்பு வட்டி விகிதங்களை அறிமுகப்படுத்தியது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் 15 முதல் இந்தியா பொது குடிமக்களுக்கு 6.8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.3% வழங்குகிறது.
எச்டிஃப்சி வங்கி 2024 ஜூலை 24 தேதி முதல் 1 வருட நிரந்தர வைப்புத் தொகையில் HDFC வங்கி பொதுக் குடிமக்களுக்கு 6.6% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.1% வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி 1 முதல்15 மாதக் காலவரையில் FDயில் பொதுக் குடிமக்களுக்கு 6.7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.20% வழங்குகிறது.
பெடரல் வங்கியானது நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை பொது குடிமக்களுக்கு 6.8% ஆகவும் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு 7.3% வரை அதிகரிக்கிறது.