இபிஎஸ் ஓய்வூதியம் பெற சில நிபந்தனைகள் உள்ளன.
இபிஎஸ் ஓய்வூதியம் பெற, ஊழியர் ஒரு EPF உறுப்பினராக இருக்க வேண்டும்.
ஊழியரின் சேவைக் காலம் குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
இபிஎஸ் ஓய்வூதியம் பெற ஊழியர் 58 வயதை எட்டியிருக்க வேண்டும்.
50 வயதை எட்டிய பிறகு அல்லது 58 வயதிற்கு முன் ஓய்வூதியம் பெறும் வசதியும் உள்ளது.
ஊழியர்கள் 58 வயதை எட்டிய பிறகும் EPS-க்கு தொடர்ந்து பங்களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஊழியர் 60 வயதில் ஓய்வூதியத்திற்கு பங்களித்தால், ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 4% என்ற விகிதத்தில் அதிகரித்த ஓய்வூதியத்தைப் பெறுவார்.
துரதிஷ்டவசமாக ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்தினர் ஓய்வூதியத்தைப் பெற உரிமை உண்டு.