Side Effects of Spicy Food: காரசாரமாக சாப்பிடுவது யாருக்கு பிடிக்காது? காரமான உணவுகள் இந்திய உணவின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளன. பொதுவாக நாம் காய்கறி, சாம்பார், ரசம் என அனைத்து உணவு வகைகளிலும் சிவப்பு மிளகாயை சேர்க்கிறோம். இதனுடன், சிவப்பு மிளகாய் தூள் நம் சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எதுவுமே அளவை மிஞ்சினால் ஆபத்துதான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காரமான உணவுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. காரமான பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே உணவில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவற்றை அதிகமாக உட்கொண்டால் நீங்கள் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.


அதிக அளவில் காரமான உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்


அஜீரணம் (Indigestion)


அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது செரிமான அமைப்பில் சிரமங்களை ஏற்படுத்தும். இது அஜீரணம், வாயுத்தொல்லை, வயிற்று பிரச்சனைகள் ஆகியவற்றை உண்டாக்கும். செரிமான அமைப்பு ஆரோக்கியமாக செயல்பட காரமான உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துவது முக்கியம்.


மனநல பிரச்சனைகள் (Mood Swings)


காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது மனநலத்தையும் பாதிக்கும். இது அதிக மன அழுத்தம், பதற்றம் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும். காரமான உணவை கவனமாக உட்கொள்வது நல்லது. இதனால் மன ஆரோக்கியத்தில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | Amla | எலும்பை இரும்பாக்கும் நெல்லிக்காய் ஜூஸ்...! வயசும் குறையும்


உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)


காரமான உணவுகளில் அதிக உப்பு மற்றும் மசாலாக்கள் உள்ளன. இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், கண்டிப்பாக மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். இல்லையெனில் அது இதய நோய்களுக்கான அபாயத்தை ஏற்படுத்தும்.


வறண்ட தோல் (Dry Skin)


காரமான உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் சருமத்தின் ஈரப்பதம் குறைந்து வறட்சி மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படும். எனவே, மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை குறைந்த அளவில் மட்டுமே சாப்பிடுவது புத்திசாலித்தனம்.


எடை அதிகரிப்பு (Obesity)


காரமான உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதற்குக் காரணம், இதில் அதிக கலோரிகள் இருப்பதால், சாப்பிட்ட பிறகு அதிகப் பசி எடுக்கலாம்.


பைல்ஸ் (Piles)


அதிகப்படியான மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் பைல்ஸ் ஏற்படுவதாற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆகையால்,  காரமான பொருட்களை சாப்பிடுவதை இன்றே குறைப்பது நல்லது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ