சம்பளம் கட்! பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக்.. டிசம்பருக்குள் இதை பண்ணிடுங்க!

PAN - Aadhar Linking: பான் கார்டு வைத்திருப்பவர்கள் உடனே அதனை ஆதார் அட்டையுடன் இணைத்துக் கொள்ளுஙகள். இல்லையெனில் பல  பிரச்னைகளை நீங்கள் சந்திக்கக் கூடும்.  

Written by - Umabarkavi K | Last Updated : Nov 7, 2025, 06:51 PM IST
  • சம்பளம் வராது
  • பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி தகவல்
  • டிசம்பர் மாதத்திற்குள் இந்த விஷயத்தை பண்ணிடுங்க
சம்பளம் கட்! பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக்.. டிசம்பருக்குள் இதை பண்ணிடுங்க!

Pan Card Latest News: இந்திய மக்களின் முக்கிய ஆவணமாக இருப்பது பான் கார்டு. வங்கி கணக்கு தொடங்குவது, பணப் பரிவர்த்தனை செய்வது, வருமான வரி தாக்குதல் செய்வது என பலவற்றுக்கும் பான் கார்டு தவிர்க்க முடியாத ஆவணமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கிய ஆவணமாக இருக்கும் பான் அட்டையை ஒரு விஷயத்தை செய்ய தவறுவதன் மூலம் பல பிரச்னைகளை நீங்கள் சந்திக்கலாம்.

Add Zee News as a Preferred Source

பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக்

அது என்னவென்றால் பான் கார்டு - ஆதார் அட்டையை இணைப்பது தான். பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை 2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இணைக்க தவறும் பட்சத்தில், உங்களது பான் கார்டு முடக்கப்படலாம். இதன் மூலம், உங்களது சம்பளம் கூட நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. 

உங்களது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையுடன் இணைப்பது இந்திய வரிச் சட்டங்களின் கீழ் கட்டாயத் தேவையாகும். வருமான வரித் துறை இந்த நடவடிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், பலரும் ஆதார் பான் கார்டை இணைக்கவில்லை. எனவே, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் பான் கார்டை இணைக்க வேண்டும்.

இவ்வளவு பிரச்னைகள் வரலாம்

ஆதார் பான் கார்டை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இணைக்காவிட்டால் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது கூறப்படுகிறது. மேலும், டிடிஎஸ் போன்றவற்றுக்கான பணத்தை திரும்ப பெற முடியாது. மேலும், உங்கள் பான் அட்டையை செயலிழக்கச் செய்வது உங்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், உங்களது பரிவர்த்தனைகளை இது தடுக்கலாம் என சொல்லப்படுகிறது.

பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், பங்குச்சந்தை போன்ற எதுவாக இருந்தாலும் உங்களால் முதலீடும் செய்ய முடியாது. அதோடு, இல்லாமல் கேஓய்சி, புதிய வங்கி கணக்குகளை திறக்கவோ முடியாது. வங்கிகளில் கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. பான் கார்டு இணைக்காவிட்டால், உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்ய முடியாது. அசையும்  மற்றும் அசையா சொத்துகளை விற்கவும் முடியாது. உங்களது பான் கார்டு செயலிழக்கப்பட்டால், பான் கார்டு இல்லாமல், பல அரசு திட்டங்களின் பலன்களைப் பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பான் ஆதார் கார்டை இணைப்பது எப்படி?

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இணைக்க அதிகாரப்பூர்வ வருமான வரி இணையதளத்தை பார்வையிடவும். அங்கு இருக்கும் Link Aadhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பிறகு உங்களது 10 இலக்க பான் நம்பரையும், 12 இலக்க ஆதார் எண்ணையும் உள்ளீட வேண்டும். பிறகு, சரிபார்ப்பு என்ற ஆப்ஷனை கிளிக் செய்தவுடன், ஆதாரை இணைத்திருக்கும் மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதனையும் உள்ளீட்டால், உங்களது ஆதார் மற்றும் பான் கார்டு இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் ஆதார் கார்டு இணைந்திருப்பதை எப்படி பார்ப்பது?

முதலில் வருமான வரி அதிகாரப்பூர்வ  இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Link Aadhaar Status என்பதை கிளிக் செய்து, உங்களது ஆதார் மற்றும் பான் கார்டை எண்ணை உள்ளீட வேண்டும். View Link Aadhaar Status என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களது பான் மற்றும் ஆதார் இணைந்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: இனி ரூ.500 மிச்சம்.. தட்கல் டிக்கெட் முன்பதிவில் மாறிய ரூல்ஸ்.. ரயில்வே அறிவிப்பு!

மேலும் படிக்க:  சொந்த வீடு இருந்தா போதும்.. மாதம் ரூ.30,000 கிடைக்கும்.. உடனே செக் பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News