)
Gold ETF: தங்கம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆபரணமாக அணிவதற்கோ, முதலீடாகவோ இதற்கான தேவை இருந்துகொண்டே இருக்கின்றது. சிலர் நகைகளாக வாங்கி தங்கத்தை சேர்க்கிறார்கள், சிலர் காயின்களாகவோ அல்லது தங்க பார்களாகவோ வாங்கி தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், இவற்றை பாதுகாத்து வைப்பது மிகப்பெரிய வேலை.
Gold Exchange Traded Funds
சமீப காலங்களில் தங்கத்தை பங்குகளாக வாங்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. Gold ETF என்பது இந்தியாவில் ஆபரணதங்கத் தங்கத்தின் விலையை பிரதிபலிக்கும் ஒரு முதலீட்டு நிதியாகும். இது தங்கம் வைத்திருக்க வேண்டிய அவசியமின்றி தங்கத்தில் முதலீடு செய்வதற்கான எளிதான வழியாகும். கோல்ட் பிரைஸ்ட் ஃபண்டுகள் தங்கக் கட்டிகளில் முதலீடு செய்கின்றன.
Gold ETF என்றால் என்ன? இந்த முதலீட்டு வகையின் முக்கிய அம்சங்கள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gold ETF என்றால் என்ன?
Gold ETF என்பது, ஃபிசிக்கல் தங்கத்தின் யூனிட்டுகளுக்கு சமமானதாகும். இது காகித வடிவத்திலோ அல்லது டிஜிட்டல் (டிமேட்) வடிவத்திலோ இருக்கும். Gold ETF -இன் ஒரு அலகு, அதாவது 1 யூனிட் 1 கிராம் தங்கத்திற்குச் சமமானது. பங்குகளைப் போல விற்க இவை எளிதாக இருப்பதால், இவை தங்க முதலீட்டை மிகவும் எளிதாக்குகின்றன.
Gold ETF : இவற்றை எங்கு வாங்குவது?
- Gold ETF பம்பாய் பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் நிறுவனப் பங்குகளில் வர்த்தகம் செய்யப்பட்டு பட்டியலிடப்படுகின்றன.
- வர்த்தக நேரங்களில் எந்த நேரத்திலும் BSEயின் கேஷ் செக்மெண்ட் அல்லது NSEயின் கேஷ் செக்மெண்ட் மூலம், அப்போது நிலவும் சந்தை விலையில் அவற்றை வாங்கலாம் அல்லது விற்கலாம்.
- Gold ETF -ஐ ஒருவர் வாங்கினால், அவர் தங்கத்தை பொருளற்ற வடிவத்தில் வாங்குகிறார் என அர்த்தம்
- பங்குகளை விற்பது போல, Gold ETF -களையும் விற்க முடியும்.
Gold ETF: இதை பணமாக்குவது எப்படி?
- Gold ETF -ஐ வாங்கிய நபர் அதை ரெடீம் செய்ய நினைத்தாலோ, அல்லது அதை விற்க நினைத்தாலோ, அவருக்கு தங்கம் கிடைக்காது, மாறாக அதற்கு ஈடான பணம்தான் கிடைக்கும்.
- Gold ETF -இல் வர்த்தகம் செய்ய, ஒரு டீமேட் கணக்கும் ஒரு தரகரும் தேவை.
- இது Gold ETF -களை, ஆன்லைனில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான எளிதான வழியாக மாற்றுகிறது.
- Gold ETF முதலீடு அதிக வெளிப்படைத்தன்மை கொண்டவை. ஏனெனில் அவை நேரடியாக தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டவை.
- Gold ETF -களின் அமைப்பு காரணமாக, அவற்றுக்கு ஆகும் செலவு தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஆகும் செலவை விட குறைவாக உள்ளது.
Gold ETF எவ்வாறு செயல்படுகிறது?
Gold ETF -இன் தூய்மை நிலை எப்படி இருக்கும்? விலை விவரங்கள் என்ன?
Gold ETF 99.5% தூய்மை கொண்ட ஃபிசிக்கல் தங்க பார்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. BSE மற்றும் NSE வலைத்தளங்களில் அவற்றின் விலைகளைப் பார்க்கலாம். இதில் முதலீடு செய்தவர்கள் பங்கு தரகர்களின் உதவியுடன் அவற்றை எந்த நேரத்திலும் விற்கலாம் அல்லது வாங்கலாம். தங்க ஆபரணங்களைப் போலல்லாமல், தங்க ETFகள் இந்தியா முழுதும் ஒரே விலையில் இருக்கும், விலையில் வேறுபாடு இருப்பதில்லை.
Gold ETF: இதை எங்கு வாங்குவது?
தரகு நிறுவனங்களின் உதவியுடன் NSE அல்லது BSE இல் தங்க ETF-களை டீமேட் கணக்கு மற்றும் வர்த்தகக் கணக்கு மூலம் வாங்கலாம். வாங்கும் போது அல்லது விற்கும் போது ஒரு சிறிய தரகு கட்டணம் மற்றும் நிதி மேலாண்மை கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
Gold ETF: இதில் உள்ள அபாயங்கள் என்ன?
தங்க ETF-கள் சந்தை அபாயங்களைக் கொண்டுள்ளன. ஏனெனில் அவற்றின் மதிப்பு தங்க விலைகளைப் பொறுத்தது. அவை SEBI-யின் மியூச்சுவல் ஃபண்ட் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஃபண்ட் வைத்திருக்கும் ஃபிசிக்கல் தங்கம் ஒரு சட்டப்பூர்வ தணிக்கையாளரால் தொடர்ந்து சரிபார்க்கப்படுகிறது.
Gold ETF: இதில் யார் முதலீடு செய்யலாம்?
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பி, ஆனால் தங்கத்தை வைத்திருப்பதில் உள்ள சிரமத்தையோ அல்லது தங்கத்தின் தூய்மையைப் பற்றி கவலைப்படுவதையோ விரும்பாதவர்களுக்கு தங்க ETF-கள் பொருத்தமானவை. அவற்றுக்கு வரி நன்மைகளும் உள்ளன. இதில் செய்கூலி இல்லை, பிரீமியமும் இல்லை. குறிப்பாக பெரிய அளவில் முதலீடு செய்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம். குறைந்தபட்சமாக ஒரு யூனிட் (1 கிராம் தங்கம்) கூட வாங்கலாம்.
Gold ETF யூனிட்களை வாங்குவதன் நன்மைகள்?
- தங்கத்தின் தூய்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறத. மேலும் ஒவ்வொரு யூனிட்டும் அதிக தூய்மை கொண்ட ETF-களால் ஆதரிக்கப்படுகிறது.
- விலை வெளிப்படையானது மற்றும் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படுகிறது.
- பங்குகள் போல பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
- இலாபங்கள் நீண்ட கால மூலதன ஆதாயங்களாகக் கருதப்படுவதால் வரி ஆதாயம் கிடைக்கும்.
- செல்வ வரி, பத்திர பரிவர்த்தனை வரி, VAT அல்லது விற்பனை வரி இல்லை.
- தனிப்பட்ட அலகுகள் ஒரு டிமேட் கணக்கில் வைக்கப்படுவதால் இவை மிகவும் பாதுகாப்பானது. எனவே திருட்டு அல்லது லாக்கரின் தேவை இருக்காது.
- ETF -களை கடன்களுக்கு பிணையமாக எடுத்துக் கொள்ளலாம்.
- எண்ட்ரி லோட் அல்லது எக்சிட் லோட் கட்டணங்கள் கிடையாது.
Gold ETF -ஐ எவ்வாறு விற்பது / ரெடீம் செய்வது?
டிமேட் கணக்கு மற்றும் வர்த்தகக் கணக்கைப் பயன்படுத்தி தரகு நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தையில் தங்க ETF-களை விற்கலாம். தங்க ETF-கள் தங்கத்தால் ஆதரிக்கப்படுவதால், அவை தங்க விலை நகர்வுகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு மிகவும் பொருத்தமானவை, ஃபிசிக்கல் தங்கத்தைப் பெறுவதற்கு அல்ல.
முதலோட்டாளர் தங்க ETF யூனிட்களை ரெடீம் செய்யும்போது தங்கத்தின் அப்போதைய சந்தை விலையில் பணத்தைப் பெறுவார். 'உருவாக்க அலகு' அளவில் 1 கிலோ தங்க (அல்லது அதன் மடங்கு) யூனிட்கள் உங்களிடம் இருந்தால், சில நிதி நிறுவனங்கள் தங்க ETF -க்கு பதில் ஃபிசிக்கல் தங்கத்தை ரெடீம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. மேலும் இதை எந்த முதலீட்டு ஆலோசனையாகவும் கருதக்கூடாது. முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ