)
EPFO Latest News: அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கிறது என்பது பலருக்கு தெரியாத விஷயமாக உள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது.
தனியார் துறை ஊழியர்களுக்கு எந்த அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்க்கின்றது? இது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது? குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் என்ன? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளாம்.
- EPFO இன் கீழ் செயல்படும் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது மாதத்திற்கு ₹1,000 ஆக உள்ளது.
- இது 2014 இல் நிர்ணயிக்கப்பட்டது, அதன் பின்னர் மாறாமல் உள்ளது.
- ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் கூடிய விரைவில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- குறைந்தபட்ச இபிஎஸ் ஓய்வூதியம் ரூ.2500 முதல் ரூ.3,000 -க்குள் அதிகரிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- இந்த அதிகரிப்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிவாரணத்தை அளிக்கும்.
- EPFO இன் கீழ் கிடைக்கும் அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உள்ளது.
அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக EPFO தெரிவித்துள்ளது.இது தொடர்பான பணிகளும் ஏற்கனவே தொடங்கப்படுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் ரூ.1,000 என்ற ஓய்வூதியத் தொகை மிகவும் குறைவாக உள்ளது என்று பல்வேறு ஊழியர் அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. தொழிற்சங்கங்களும் பல்வேறு ஓய்வூதியதாரர் சங்கங்களும் நீண்டகாலமாக ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என கோரி வருகின்றன.
- EPS இன் கீழ் ஓய்வூதியம் பெற, ஊழியர்கள் சில முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
- இபிஎஸ் ஓய்வூதியம் பெற, ஊழியர் EPFO -வில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- அவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு இபிஎஃப் கணக்கில் பங்களித்திருக்க வெண்டும்.
- 58 வயதிற்குப் பிறகு இபிஎஸ் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்குகின்றது
EPS இன் கீழ் ஓய்வூதியம் ஒரு நிலையான சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது:
இபிஎஸ் ஓய்வூதியம் = (ஓய்வூதிய சம்பளம் × ஓய்வூதிய சேவை) ÷ 70
- ஓய்வூதிய சம்பளம் என்பது கடந்த 60 மாத சேவைக்கான சராசரி அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி ஆகும்.
- தற்போது, EPFO இன் கீழ் சம்பள வரம்பு ரூ. 15,000 ஆக உள்ளது.
- ஓய்வூதிய சேவை என்பது மொத்த சேவை ஆண்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
ஓய்வூதிய ஊதியத்திற்கான அதிகபட்ச வரம்பு மாதத்திற்கு ₹15,000 ஆகும். இதன் பொருள் ஒரு உறுப்பினர் 35 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அவர்கள் மாதத்திற்கு ₹7,500 அதிகபட்ச ஓய்வூதியத்தைப் பெறலாம். குறைந்தபட்ச ஓய்வ்தியம் ரூ.1,000 ஆக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ