நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: புதிய ஓய்வூதியத் திட்டம்.... சைலண்டாக பணிகளை தொடங்கிய மத்திய அரசு

Universal Pension Scheme: யுனிவர்சல் பென்ஷன் திட்டம் என்றால் என்ன? இது தன்னார்வ பங்களிப்பு திட்டமா? யாரெல்லாம் இதில் சேர முடியும்? இந்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் பதில்களை காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 6, 2025, 04:56 PM IST
  • தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்.
  • பணிகளை தொடங்கிய தொழிலாளர் அமைச்சகம்.
  • இதனால் யாருக்கு அதிக லாபம்?
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: புதிய ஓய்வூதியத் திட்டம்.... சைலண்டாக பணிகளை தொடங்கிய மத்திய அரசு

Universal Pension Scheme: மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல வித நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஓய்வூதியத் திட்டங்களும் அடங்கும். இந்த ஓய்வூதியத் திட்டங்கள் குழுக்களுக்கான திட்டங்களாக உள்ளன. அதாவது, அரசு ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என பல பிரிவுகளுக்கு பல திட்டங்கள் உள்ளன. ஆனால், இப்போது அரசு, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

Voluntary Pension Scheme: தன்னார்வ ஓய்வூதியத் திட்டம்

ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ளவர்கள், அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்கள், எந்த வித ஓய்வூதியத் திட்டத்தின் கீழும் வராதவர்கள் என அனைவரும் தாமாக முன்வந்து பங்களிக்கும் ஒரு தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் விருப்பமாகும். இந்தியா இளைஞர்களுடன் சேர்ந்து, முதியோர் மக்கள்தொகையும் அதிகரிக்கும் நாடாக மாறி வருவதால் இப்படிப்பட்ட ஓய்வூதிய திட்டங்களுக்கான தேவை அதிகம் உள்ளது.

Social Security Schemes: சமூக பாதுகாப்பு திட்டங்கள்

நாட்டில் சிறந்த சமூகப் பாதுகாப்பு முறை தேவை என மத்திய அரசு கருதுகிறது. பல்வேறு மாநிலங்களில் முதியோர் ஓய்வூதியம் என்ற பெயரில் பெறப்படும் ஓய்வூதியத்தின் அளவு மிகக் குறைவாகவே இருக்கின்றது. அந்தப் பணத்தில் ஒருவரது செலவுகளை ஈடுசெய்வது கடினம். அடுத்த 20-30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பெரிய மக்கள் தொகை சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் வரும். அதற்குள் ​​அதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிடுகிறது.

இதற்காக, அரசாங்கம் ஒரு உலகளாவிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதில் அனைத்து குடிமக்களும் தானாக முன்வந்து ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து, அதில் ஒரு நிலையான தொகையை பங்களிக்க வேண்டும். 20-25 ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு ஒரு வருமானத் தொகை கிடைக்கும். 

Government Employees: அரசு ஊழியர்கள்

தற்போதைய முறையின்படி, ஓய்வூதியத்திற்காக அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பணம் கழிக்கப்படுகிறது. அரசாங்கமும் அதற்கு பங்களிக்கிறது. பின்னர் இந்திய ஓய்வூதிய நிதியம் (EPFO) அந்த நிதியைக் கையாளுகிறது.

Private Sector Employees: தனியார் துறை ஊழியர்கள்

தனியார் துறையிலும் பல ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு EPFO ​​ஆல் நிர்வகிக்கப்படும் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் மூலம் ஓய்வூதியம் கிடைக்கின்றது. 

Unorganised Sector: அமைப்புசாரா துறைகள்

அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக அடல் பென்ஷன் திட்டம் போன்ற ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன.

ஆனால், அரசு இப்போது, வேலை, தொழில், வர்த்தகம், பொருளாதார நிலை என எதையும் சாராமல் அனைவருக்குமான ஒரு பொதுவான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கவுள்ளது. இதற்கான நிதியை கையாள அரசு நாட்டின் பிரதான பொருளாதார அமைப்புகளின் உதவியை பெறக்கூடும்.

Labour Ministry: பணிகளை தொடங்கிய தொழிலாளர் அமைச்சகம்

இந்த தன்னார்வ பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கான ஆய்வுகளை தொழிலாளர் அமைச்சகம் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஓய்வூதிய முறை, அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய அனுமதிக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கான கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், இதற்கான விதிகள் மற்றும் விவரங்களை சீராக்கி மேமப்டுத்த அரசாங்கம் முக்கிய பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை நடத்தும். 18-60 வயதுக்குட்பட்ட அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்து 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியப் பலன்களைப் பெறலாம். 

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம்: விதிகளில் மாற்றம், இனி இந்த பணிகள் எளிதாக முடியும்

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் UPS: ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News