மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக்குழு வருமா, வராதா?

8th Pay Commission: லட்சக்கணக்கான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 8வது ஊதியக் குழுவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்து அரசு தரப்பிலும் சமீபத்தில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 11, 2024, 03:31 PM IST
  • 8வது ஊதியக் குழு வருமா, வராதா?
  • வரும் என்றால், எப்போது வரும்?
  • வராது என்றால், அதற்கான காரணம் என்ன?
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக்குழு வருமா, வராதா?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இது குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. எனினும், 8வது ஊதியக் குழு வருமா, வராதா? வரும் என்றால், எப்போது வரும்? வராது என்றால், அதற்கான காரணம் என்ன? இப்படி பல கேள்விகள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனங்களில் உள்ளன. 

Add Zee News as a Preferred Source

Central Government Employees:

லட்சக்கணக்கான ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) 8வது ஊதியக் குழுவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்து அரசு தரப்பிலும் சமீபத்தில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றியும் இங்கே காணலாம்.

பரிசீலனையில் இல்லை: நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி 

எட்டாவது ஊதியக் குழு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், மாநிலங்களவையில் 8வது ஊதியக்குழு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது தற்போது பரிசீலனையில் இல்லை என்று அவர் தன் பதில் மூலம் தெளிவுபடுத்தினார். இது ஊழியர்களுக்கு பேரிடியாக வந்தது.

இதுமட்டுமின்றி, 8வது ஊதியக் குழு அமைப்பதை நரேந்திர மோடி அரசு முற்றிலுமாக கைவிடக்கூடும் என்று சமீபத்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சரின் பேச்சும் இதையே சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் படிக்க | Budget 2025: ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை கிடைக்குமா? மூத்த குடிமக்களின் முக்கிய எதிர்பார்ப்பு

8வது ஊதியக்குழு வராதா?

- ஊதியக் குழுவிற்குப் பதிலாக ஊதியத் திருத்தத்திற்கான புதிய வழிமுறையை அரசாங்கம் செயல்படுத்தக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- புதிய முறைக்கான வாய்ப்பு இருப்பதாக ஊழியர் சங்கத் தலைவர்கள் கூறியதாக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
- தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பு (NC-JCM) ஊழியர்கள் தரப்பின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, மத்திய அரசு வேறு வழிமுறையை செயல்படுத்த வாய்ப்புள்ளதாக கருதுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

7th Pay Commission: 7வது ஊதியக்குழு எப்போது வரை செயலில் இருக்கும்?

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2016 இல் நடைமுறைப்படுத்தப்பட்டன. கடந்த காலப் போக்குகளின்படி, பொதுவாக அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுக்களை அமைக்கின்றது. அந்த வழியில், 8வது ஊதியக்குழு 2026 ஆம் ஆண்டு அமலுக்கு வர வேண்டும். ஊதியக்குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை அமல்படுத்த 1 ஆண்டு காலமாவது ஆகும் என்பதால், இப்போது அதற்கான அறிவிப்பு வந்தால்தான், 2026 ஆம் அண்டு அதை செயல்படுத்த முடியும். இந்த காரணத்தால்தான் தற்போது 8வது ஊதியக்குழ்விற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Salary Hike: 

அரசாங்கம் 8வது ஊதியக் குழுவை அறிவித்து, அது அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சுமார் 186 சதவீதம் ஏற்றம் காணும். இது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்ளுக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்பட்டால்,

-  குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000, ரூ.51,480 ஆக அதிகரிக்கலாம்.
- தற்போது ரூ.9,000 ஆக உள்ள ஓய்வூதியம் ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம். 

மேலும் படிக்க | EPFO குட் நியூஸ்: அரசின் பரிசு.... ஓய்வூதியம் அதிகரிக்கும், ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News