தொழிலதிபர் கோபிசந்த் இந்துஜா காலமானார் அவரின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Who Is This Gopichand Hinduja: இந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் பி இந்துஜா லண்டனில் காலமானார் என்று குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி செவ்வாய்க்கிழமை தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்துறையின் ஜாம்பவான் 85 வயதுடையவர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 4, 2025, 08:26 PM IST
தொழிலதிபர் கோபிசந்த் இந்துஜா காலமானார் அவரின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Gopichand Hinduja Passed Away: வணிக தொழில் நிறுவனங்களின் வியாபார வட்டாரத்தில் 'GP' என்று பிரபலமாக அறியப்படும் கோபிசந்த் இந்துஜா, கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் லண்டன் மருத்துவமனையில் காலமானார். குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த கோபிசந்த் இந்துஜா, மே 2023 அவரது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் காலமான பிறகு, இந்துஜா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். யார் இந்த கோபிசந்த் இந்துஜா? அவரின் குடும்ப பின்னணி மற்றும் அவரின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு? போன்ற விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

கோபிசந்த் இந்துஜா காலமானார்:

இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பி. இந்துஜா லண்டனில் காலமானார் என்று குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. தொழில்துறையின் இந்த ஜாம்பவான் 85 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துஜா குழுமத்தின் வளர்ச்சி:

1940 இல் இந்தியாவில் பிறந்த கோபிசந்த் இந்துஜா, இந்திய கூட்டு நிறுவனமான இந்துஜா குழுமத்தை வழிநடத்தினார். பர்மானந்த் இந்துஜா மற்றும் அவரது மனைவி ஜமுனாவின் மகனான கோபிசந்த் மற்றும் அவரது சகோதரர்கள் ஸ்ரீசந்த், பிரகாஷ் மற்றும் அசோக் ஆகியோர் இந்துஜா குழுமத்தை முன்னோக்கி எடுத்து சென்று, தற்போது 38 நாடுகளில் தடம் பதித்து, 2,00,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு சர்வதேச கூட்டு நிறுவனமாக உயர்த்தியதற்கு பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.

கோபிசந்த் இந்துஜாவின் பட்டம் மற்றும் தொழில்

கோபிசந்த் இந்துஜா 1959 இல் மும்பையில் உள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதே ஆண்டு முதல் குடும்பத் தொழிலில் தண்ணி ஈடுபடுத்திக்கொண்ட அவர், இந்தியா மற்றும் ஈரான் முழுவதும் ஜவுளி மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். இந்துஜா குழுமத்தை உலகளாவிய, பல பில்லியன் டாலர் வணிகமாக மாற்றிய முக்கிய நபர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். இந்துஜா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, கோபிசந்த் இந்துஜா இங்கிலாந்தில் உள்ள இந்துஜா ஆட்டோமோட்டிவ் லிமிடெட்டின் தலைவராக இருந்தார்.

அவர் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டத்திலும், லண்டனில் உள்ள ரிச்மண்ட் கல்லூரியில் பொருளாதாரத்திலும் கௌரவ முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். அவரது தலைமையின் கீழ், இந்துஜா குழுமம் பல மைல்கற்களை எட்டியது, அவற்றில் 1984 இல் கல்ஃப் ஆயிலை கையகப்படுத்தியது, அதைத் தொடர்ந்து 1987 இல் அசோக் லேலேண்ட் நிறுவனத்தை கையகப்படுத்தல் என்பது வணிக வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான திருப்புமுனைக் கதைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. 

கோபிசந்த் இந்துஜா குடும்ப பின்னணி:

- கோபிசந்த் இந்துஜாவின் மனைவி சுனிதா இந்துஜா. மகன்கள் சஞ்சய் மற்றும் தீரஜ் மற்றும் மகள் ரீட்டா.

- அவரது சகோதரர்கள் பிரகாஷ் இந்துஜா மற்றும் அசோக் இந்துஜா ஆகியோரும் உள்ளனர், அவர்கள் முறையே ஐரோப்பா மற்றும் இந்தியாவில் நிறுவனத்தின் வணிகங்களை வழிநடத்துகிறார்கள்.

கோபிசந்த் இந்துஜாவின் நிகர சொத்து மதிப்பு:

- இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியல் படி, கோபிசந்த் இந்துஜா தொடர்ந்து ஏழு ஆண்டுகள் யுனைடெட் கிங்டமின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார்.

- கோபிசந்த் இந்துஜா தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் ஐக்கிய இராச்சியத்தில் பணக்காரர் ஆவார்.

- மே 2025 இல் வெளியிடப்பட்ட சொத்துமதிப்பு பட்டியலின் படி, கோபிநாத் இந்துஜா 35.304 பில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இது தோராயமாக ₹33,67,948.64 கோடிக்கு சமம்.

- அதேபோல ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 2025 நிலவரப்படி அவரது நிகர மதிப்பு $20.6 பில்லியனாக இருந்தது.

மேலும் படிக்க - Bilaspur Train Collision: பரபரப்பு! ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. பலர் உயிரிழப்பு..

மேலும் படிக்க - கோவை பாலியல் வன்கொடுமை: நைட் 11 மணிக்கு அந்த பொண்ணு ஏன் அங்க போகணும்? கமிஷனர் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News