)
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana : எந்த வகையான வங்கி கணக்கு நீங்கள் வைத்திருந்தாலும் உங்கள் வங்கி அக்கவுண்டில் இருந்து ரூ. 436 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா?, அது எதற்காக பிடித்தம் செய்யப்பட்டது என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?, முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். SBI, தபால் வங்கி மற்றும் பிற வங்கிகளில் கணக்கு உள்ளவர்கள், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY)-இல் சேர்ந்துள்ளீர்கள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் ₹436 உங்கள் கணக்கில் இருந்து தானாக பிடித்தம் செய்யப்பட்டு பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜ அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இந்தத் தொகை ஆண்டுதோறும் மே 31-க்குள் வசூலிக்கப்படும். இதை எப்படி நிறுத்துவது என்பதை இங்கு பார்க்கலாம்.
பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (PMJJBY) என்றால் என்ன?
இந்தத் திட்டம் ₹2 லட்சம் வரை வாழ்க்கைக் காப்பீட்டு உத்தரவாதம் அளிக்கிறது. இதன் ஆண்டு பிரீமியம் ₹436 மட்டுமே. இது ஜூன் 1 முதல் மே 31 வரை செல்லுபடியாகும்.
யார் இதைப் பெறலாம்?
- வயது 18 முதல் 50 வரை உள்ளவர்கள்
- SBI, தபால் வங்கி அல்லது வேறு எந்த வங்கியிலும் கணக்கு உள்ளவர்கள்
- ஆதார் எண் KYC-க்கு அவசியம்
- Auto-debit ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும்
ஆட்டோ டெபிட் (தானாக வரவு வைப்பது) எப்படி நிறுத்துவது?
இனி ₹436 உங்கள் கணக்கில் இருந்து தானாக வரவு வைக்கப்படாமல் இருக்க பின்வரும் முறைகளைப் பின்பற்றவும்:
1. வங்கியை நேரில் அணுகி நிறுத்தவும்
உங்கள் PMJJBY இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கை அணுகவும். PMJJBY-இலிருந்து விலகல் படிவத்தை நிரப்பவும். Auto-debit நிறுத்தக் கோரிக்கை செய்யவும்.
2. கணக்கில் பணம் இல்லாவிட்டால் தானாக நிற்கும்
உங்கள் கணக்கில் ₹436 இல்லை என்றால், Auto-debit நடக்காது. இதனால், உங்கள் PMJJBY தானாக ரத்து ஆகிவிடும்.
3. ஆன்லைனில் முயற்சிக்கலாம் (சில வங்கிகளில் மட்டும்)
வங்கியின் Net Banking/ Mobile App-ல் சென்று Auto-debit mandates பகுதியைப் பார்க்கவும்.
PMJJBY-க்கான Auto-debit-ஐ நிறுத்தலாம் (வங்கியைப் பொறுத்து).
PMJJBY-ஐ நிறுத்தினால் என்ன ஆகும்?
காப்பீட்டு உத்தரவாதம் இழக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் சேர வேண்டுமென்றால், புதிய அப்ளிகேஷன் தேவை.
கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்:
- மே 31-க்குள் பிரீமியம் செலுத்தப்படாவிட்டால், PMJJBY தானாகவே ரத்து ஆகிவிடும்.
- இனி ₹436 வரவு வைக்கப்படாமல் இருக்க வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ