)
DA Arrears Latest News: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக அரசாங்கத்திடமிருந்து ஒரு பெரிய அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார்கள். 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை ஊழியர்களுக்கு இன்னும் உள்ளது. இதை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு என அரசு கூறியிருந்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 18 மாத டிஏ அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுமா என்பது பற்றிய விவாதம் நடக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அதைக் கோரி வருவதுதான் அதற்கு காரணம்.
Central Government Employees: அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை
டிஏ நிலுவைத் தொகைக்கான இந்தக் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. டிஏ நிலுவைத் தொகை தொடர்பாக அரசாங்கம் ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. மத்திய ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத் தொகை கிடைக்குமா இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம், மத்திய அரசிடமிருந்து தெளிவான மறுப்பு வந்துள்ளது.
18 Months DA Arrears: 18 மாத டிஏ அரியர் தொகை
மழைக்கால கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் 18 மாத டிஏ நிலுவைத் தொகை குறித்து அரசாங்கத்திடம் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, மாநில நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அரசாங்கத்திடம் அத்தகைய திட்டம் எதுவும் நிலுவையில் இல்லை என்று கூறியிருந்தார்.
Dearness Allowance: அகவிலைப்படி ஏன் முடக்கப்பட்டது?
கொரோனா காலத்தில் உருவான அசாதாரண சூழலை சமாளிக்க மத்திய அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 தவணைகளுக்கு நிறுத்தியது. ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தேதிகளில் செலுத்த வேண்டிய மூன்று அகவிலைப்படி/அகவிலை நிவாரன தவணைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த தொகை நலிந்த பிரிவு மக்கள் மற்றும் அதிக தேவையில் உள்ள மக்களின் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. நிலைமை சற்று சரியானவுடன் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டது.
முடக்கப்பட்ட அகவிலைப்படி தொகை முழுதும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டதால், அதன் நிலுவைத் தொகையை அளிக்கும் எண்ணம் இப்போது இல்லை என அரசாங்கம் அதை திட்டவட்டமாக மறுத்தது. 18 மாத அரியர் தொகை வரத் தொடங்கினால், முதல் வகை ஊழியர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் கிடைக்கும் என்பது உறுதி.
டிஏ அரியர் தொகை குறித்த தனது நிலைப்பாடை மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டாலும், அவ்வப்போது மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஊழியர் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் இதற்கான கோரிக்கையை அரசின் முன் வைத்து வருகின்றனர்.
DA, DR ஏன் வழங்கப்படுகின்றது?
அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் முக்கிய அம்சமாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இவை திருத்தப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ