முக்கிய செய்தி!! இனி 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? அரசு கூறியது என்ன?

Central Government Pensioners Latest News: ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? இதை பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 27, 2025, 05:03 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய விதிகள் மாறுமா?
  • மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்கப்படுகிறது?
  • கருணைத்தொகை வயது வரம்பு குறித்த நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை என்ன?
முக்கிய செய்தி!! இனி 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? அரசு கூறியது என்ன?

Additional Pension For Central Government Pensioners: ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கான தற்போதைய வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இருப்பினும், இந்த விஷயத்தில் அரசாங்கம் மீண்டும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த முக்கிய செய்தி

கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது வரம்பைக் குறைப்பதற்கான எந்த எண்ணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது 80 ஆகவே இருக்கும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், இந்த வரம்பை 65 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான திட்டம் இருந்ததாகவும், ஆனால் அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

ஓய்வூதியதாரர்களின் குறைகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தபடி, வயது வரம்பை 65 ஆகக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். அப்படி இருந்தால், அது குறித்த விவரங்களையும் அளிக்குமாறு அவர் கேட்டார்.

Additional Pension: கூடுதல் ஓய்வூதியம்

இந்தக் கேள்விக்கு பதிலளித்த மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில், 80 வயதில் 20% கூடுதல் ஓய்வூதியமும், 85 வயதில் 30% கூடுதல் ஓய்வூதியமும், 90 வயதில் 40% கூடுதல் ஓய்வூதியமும், 95 வயதில் 50% கூடுதல் ஓய்வூதியமும், 100 வயதில் 100% கூடுதல் ஓய்வூதியமும் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவையில் தெரிவித்தார்.

வயது அதிகரிக்கும் போது, ​​குறிப்பாக உடல்நலம் தொடர்பான தேவைகளும் அதிகரிப்பதாகவும், இதை கருத்தில்கொண்டு, கூடுதல் ஓய்வூதியத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Pension Rules: மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் ஓய்வூதிய விதிகள் மாறுமா?

நாடாளுமன்ற நிலைக்குழு 2021 ஆம் ஆண்டில் 65 வயதிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் வழங்க பரிந்துரைத்தது. அரசாங்கம் இதைப் பரிசீலித்து 2022 இல் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தது. இதன் பிறகு, இந்தப் பிரச்சினையை மேலும் தொடர வேண்டாம் என்று குழு முடிவு செய்தது. அதாவது தற்போது குறைந்தபட்ச வயது தகுதியைக் குறைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்பது தெளிவாகிறது.

Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்கப்படுகிறது?

- கூடுதல் ஓய்வூதியம் வங்கிகள் மற்றும் ஓய்வூதிய விநியோக நிறுவனங்கள் மூலம் தானாகவே வழங்கப்படும்.
- இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முழுமையாக கனவித்து ஓய்வூதியம் சரியான நேர்த்தில் அளிக்கப்படுவதை  உறுதி செய்கிறது.
- இதில் ஏதேனும் தாமதம் அல்லது இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன.

Compassionate Allowance: கருணைத்தொகை வயது வரம்பு குறித்த நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை என்ன?

நாடாளுமன்றக் குழு 65 வயதுக்கு பிறகு கூடுதல் ஓய்வூதியத்தை வழங்கத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 65 வயது முதல் ஓய்வூதியதாரர்களின் தேவை அதிகரிக்கிறது என்றும், அந்த வயதில் கூடுதல் ஓய்வூதியத்தை அளிப்பது உதவியாக இருக்கும் என்றும் குழு தெரிவித்தது. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை பின்வருமாறு:

65 வயதில்: 5% கூடுதல் ஓய்வூதியம்
70 வயதில்: 10% கூடுதல் ஓய்வூதியம்
75 வயதில்: 15% கூடுதல் ஓய்வூதியம்
80 வயதில்: 20% கூடுதல் ஓய்வூதியம்

எனினும், தற்போது கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் வயதை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Alert... மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கவேண்டிய சில முக்கிய வேலைகள் இவை தான்... நோட் பண்ணிக்கோங்க

மேலும் படிக்க |  ஏப்ரலில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? RBI வெளியிட்டுள்ள பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News