)
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது தொடர்பான பல வித வதந்திகளும், புதிய அப்டேட்களும் பல வித செய்திகளும் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகின்றன. இதில் முக்கியமாக 8வது ஊதியக்குழுவின் பலன்கள் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காது என்ற செய்தியும் உள்ளது.
8வது ஊதியக்குழுவின் நன்மைகள் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா? இந்த குழப்பம் பலருக்கு உள்ளது. இதற்கான காரணம் என்ன? உண்மையில் புதிய ஊதியக்குழுவின் நன்மைகள் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்காதா? இது குறித்த விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளதா? முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இந்த முக்கிய கேள்விக்கான விடையை தெரிந்துகொள்ள காத்திருக்கிறார்கள். 8வது மத்திய சம்பள கமிஷனின் அமலாக்கத்தில் ஏற்படும் தாமதம் மற்றும் அதன் காலக்கெடு குறித்த தெளிவான தகவல் இல்லாத நிலை ஆகியவை ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களிடையே பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது. ஓய்வூதியதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புகள் சமீபத்தில் அரசாங்கத்திடம் இந்த குழப்பங்களை தெளிவுபடுத்தி, ஓய்வூதியதாரர்களிடையே அதிகரித்து வரும் சந்தேகங்களைத் தடுக்க 8வது ஊதியக்குழு அமைப்பை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது ஊடியக்குவின் நன்மைகள் கிடைக்கும் என்பதை அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், புதிய சம்பளக் குழுவின் பரிந்துரைகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆகையால் தற்போது 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படிதான் ஓய்வூதியதாரர்களுக்கும் நன்மைகள் கிடைக்கின்றன. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன், மத்திய அரசு ஊழியர்களை போலவே ஓய்வூதியதாரர்களுக்கும் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நன்மைகள் கிடைக்கும்.
8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த இன்னும் 1.5 முதல் 2 ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தும் போது ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
- 8வது ஊதியக்குழுவின் காரணமாக, ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு கிடைக்கும். 8வது ஊதியக்குழு பரிந்துரைக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில், ஓய்வூதியங்களின் உயர்வு, பணிபுரியும் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஒத்ததாக இருக்கும்.
- புதிய ஊதியக்குழுவின் பிற நன்மைகள், அது தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்த பின்னரே அறியப்படும்.
- சமீபத்திய வாரங்களில் பல்வேறு அறிக்கைகள் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பைக் கணித்துள்ளன. ஆம்பிட் கேபிடல் அறிக்கையின்படி, ஓய்வூதியங்களில் 8வது ஊதியக்குழுவின் தாக்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை போலவே இருக்கும்.
- ஓய்வூதியதாரரின் மாதாந்திர அடிப்படை ஓய்வூதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் உயரும். புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டரின் 1.8 - 2.86 -க்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"6.8 மில்லியன் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இது தற்போது பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். ஓய்வூதியங்களில் 8வது சம்பள பரிந்துரைகளின் தாக்கம் அரசாங்க சம்பளங்களைப் போலவே இருக்கும். ஓய்வூதியத்தில் அடிப்படை ஓய்வூதியம் மற்றும் அகவிலை நிவாரணம் இருக்கும். ஆனால் மத்திய அரசு ஊழியர்களை போல HRA மற்றும் பயணப் படி கூறுகள் இதில் இருக்காது. அதாவது ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ஏற்படும் மாற்றம் அடிப்படை ஓய்வூதியத்தை அதிகரிக்கும். அகவிலைப்படியை போலவே அகவிலை நிவாரணமும் பூஜ்ஜியத்திற்கு ரீசெட் செய்யப்படும்” என்று அறிக்கை கூறுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ