EPFO Interest: தனியார் துறை பணிகளில் பணிபுரியும் அனைவரும் மாதா மாதம் தங்கள் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் வேலையை மாற்றினாலும், PF கணக்கு செயலில் இருக்கும். புதிய நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதி அதில் சேரத் தொடங்கும்.
EPF Members: உறுப்பினர்களுக்கு வரும் முக்கிய சந்தேகம்
பல சமயங்களில் சிலருக்கு வேலை போகும் சூழல்கள் ஏற்படுகின்றன. அப்போது இபிஎஃப் கணக்குக்கு என்ன ஆகும்? கணக்கு ஆக்டிவாக செயலில் இருக்குமா? PF கணக்கில் உள்ள பணத்திற்கு பணத்திற்கு வட்டி கிடைக்குமா? இந்த கேள்விகளுக்கான பதிலை இங்கே காணலாம்.
இபிஎஃப்ஓ விதிகள் கூறுவது என்ன?
- EPFO இதற்கு சில விதிகளை வகுத்துள்ளது.
- அதில் சில நிபந்தனைகள் உள்ளன.
- இதை இபிஎஃப் உறுப்பினர்கள் புரிந்துகொள்வது நல்லது.
- இதன் மூலம் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
- டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி இந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் அளிக்கப்படுகின்றது.
PF கணக்கு இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள EPFO நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்றது.
EPFO உறுப்பினராக இருப்பதற்கான விதிகள் என்ன?
- EPF உறுப்பினர் பற்றிய தகவல்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
- EPFO-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, EPF உறுப்பினர் சேர்க்கைக்கு எந்த தடையும் இல்லை.
- நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகும் ஒருவர் இதில் தொடர்ந்து உறுப்பினராக இருக்கலாம்.
- இருப்பினும், உங்கள் பங்கு PF கணக்கில் வருவதை நிறுத்தினால், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கணக்கில் செலுத்தப்படும் வட்டி நிச்சயமாக நின்றுவிடும்.
EPF Interest: இபிஎஃப் தொகை மீதான வட்டி எப்போது நிறுத்தப்படும்?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கிய தகவலின்படி, ஒரு உறுப்பினர் PF கணக்கில் எந்த வகையான பங்களிப்பையும் செலுத்தவில்லை என்றால், பங்களிப்பு இல்லாத நாளிலிருந்து சரியாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கணக்கில் செலுத்தப்படும் வட்டி நின்றுவிடும்.
EPF Account: வேலை பறிபோனால் இபிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?
- EPF கணக்கு எதிர்காலத்திற்கான சிறந்த சேமிப்புத் திட்டமாக பார்க்கப்படுகின்றது.
- ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்தில் 12 சதவீதம் இந்த கண்ககில் பங்களிக்கப்படுகிறது.
- அதே பங்களிப்பை நிறுவனமும் செய்கிறது.
- PF கணக்குகளில் அரசாங்கத்தால் ஒரு நல்ல அளவு வட்டி வழங்கப்படுகிறது.
- அதன் உதவியுடன், இபிஎஃப் உறுப்பினர்கள் எதிர்காலத்திற்காக ஒரு நல்ல நிதியை சேர்க்க முடிகிறது.
- ஒருவர் தனது வேலையை இழந்தால், அத்தகைய சூழ்நிலையில் அவர் தனது இபிஎஃப் பணத்தை எடுக்கலாம்.
- இபிஎஃப் உறுப்பின்ரகள் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தால், அவர்கள் தங்களது வைப்புத் தொகையில் 75 சதவீதம் வரை எடுக்கலாம்.
- அதேசமயம், 2 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலையில்லாமல் இருந்தால், அவர்கள் முழுத் தொகையையும் எடுக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









