EPFO வட்டி விகிதத்தை அதிகரிக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள், விரைவில் முக்கிய அறிவிப்பு

EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்கள் இடையே இபிஎஃப் வட்டி விகிதம் குறித்த பேச்சு பரவலாக உள்ளது. இந்த முறை வட்டி அதிகரிக்கப்படும் என ஊழியர்கள் நம்புகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 13, 2025, 01:53 PM IST
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வட்டி விகிதம் உயருமா?
  • இபிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் வட்டித்தொகை எப்போது வரும்?
  • CBT என்றால் என்ன?
EPFO வட்டி விகிதத்தை அதிகரிக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள், விரைவில் முக்கிய அறிவிப்பு

EPFO Interest Rate: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2024-25 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை இன்னும் சில நாட்களில் வெளியிடக்கூடும். இபிஎஃப் வட்டி விகிதம் அதிகரிக்குமா? தற்போதைய வட்டி விகிதம் என்ன? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வட்டி விகிதம் உயருமா?

இபிஎஃப் உறுப்பினர்கள் இடையே இபிஎஃப் வட்டி விகிதம் குறித்த பேச்சு பரவலாக உள்ளது. இந்த முறை வட்டி அதிகரிக்கப்படும் என ஊழியர்கள் நம்புகிறார்கள். எனினும், இந்த முறை வட்டி விகிதம் அதிகரிக்கப்படாது என்றும், ஏற்கனவே உள்ள விகிதமே தொடரப்படும் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு மூலம் நல்ல செய்தி தந்த மத்திய அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் நல்ல செய்தியாக இபிஎஃப் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்றும் ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.

Central Board of Trustees: மத்திய அறங்காவலர் குழு

இபிஎஃப் வட்டி விகிதங்களை முடிவு செய்ய மத்திய அறங்காவலர் குழு (CBT) பிப்ரவரி 28 அன்று கூடும் என கூறப்பட்டுள்ளது. வாரியம் 8.25 சதவீதத்தை முடிவு செய்தால், அது கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதத்திலேயே தொடரும்.

​​முதலீடுகள் மூலம் அதிக வருமானம் மற்றும் சந்தாதாரர் தளத்தில் அதிகரிப்பு என EPFO ​​-க்கு இது ஒரு நல்ல நிதியாண்டாக இருந்துள்ளது. எனினும், இந்த ஆண்டில் அதிக அளவிலான க்ளெய்ம்களும் செட்டில் செய்யப்பட்டன. இது நிதி வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது. இந்த முடிவு 65 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

- EPFO ​​அமைப்பு 2024-25 ஆம் ஆண்டில் இதுவரை 5 கோடிக்கும் அதிகமான க்ளெய்ம்களை செட்டில் செய்துள்ளது.
- இது ரூ.2.05 லட்சம் கோடி மதிப்புடையது.
-  2023-24 ஆம் ஆண்டில் செட்டில் செய்யப்பட்ட  4.45 கோடி க்ளெய்ம்களின் மதிப்பு ரூ.1.82 லட்சம் கோடியாகும்.  

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் வட்டித்தொகை எப்போது வரும்?

EPFO ஒவ்வொரு ஆண்டும் PF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை CBTக்கு முன்மொழிகிறது. CBT -யின் ஒப்புதலுக்குப் பிறகு, கொடுக்கப்பட்ட விகிதத்திற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது. அது அறிவிக்கப்பட்டு, பின்னர் EPFO ​​சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும். வழக்கமாக இது அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடக்கும்.

கடந்த ஆண்டு, EPFO ​​2023-24 ஆம் ஆண்டிற்கான மொத்த அசல் தொகையான சுமார் ரூ.13 லட்சம் கோடிக்கு 8.25 சதவீத வட்டியை வழங்கியது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச வட்டியாகும்.

CBT என்றால் என்ன?

EPFO -வின் சட்டம் மற்றும் திட்டங்கள் மும்முனை குழுவால் நிர்வகிக்கப்படுகின்றது. இதில் மத்திய அறங்காவலர் குழு, மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் பிரதிநிதிகளை கொண்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆகியவை அடங்கும்.

இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை EPFO நிர்வகிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் நிதி பரிவர்த்தனைகளின் அளவு அடிப்படையில் இது உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

மேலும் படிக்க | Kerala Lottery | கோடைக்கால லாட்டரி விற்பனை! முதல் பரிசு 10 கோடி.. ஒரு டிக்கெட் விலை ரூ.250

மேலும் படிக்க | மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி இந்த தொகையும் கிடைக்கும், அரசு அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News