)
EPS Pension Latest News: இபிஎஃப் உறுப்பினரா நீங்கள்? மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்துகொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். சமீப காலங்களில் இபிஎஃப்ஓ மூலம் அளிக்கப்படும் இபிஎஸ் ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் எழுந்து வருகின்றது. இபிஎஸ் ஓய்வூதியம் உயர்த்தப்படுமா? இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இவை அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.
ஊழியர் ஓய்வூதியத் திட்டம்
- ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்கும் அமைப்பாகும்.
- இது 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக இபிஎஸ் ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது.
- EPFO ஆல் நிர்வகிக்கப்பட்ம் EPF -இல் பணியாளர், நிறுவனம் என இரு சாராரும் பங்களிக்கிறார்கள்.
- ஆனால், EPS -இல் நிறுவனத்தின் பங்களிப்பிலிருந்து மட்டும் ஒரு பகுதி எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
- இபிஎஃப் உறுப்பினர்களும், அவர்களது நிறுவன்னகளும் ஊதியத்தில் 12% -ஐ பங்களிக்கிறார்கள். ஊழியர்களின் 12% முழுவதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவீதம் EPF-க்கும், மீதமுள்ள 8.33 சதவீதம் EPS-க்கும் செல்கிறது.
- இபிஎஃப் தொகை ஊழியர்களுக்கு மொத்தமாக செலுத்தப்படுகிறது.
- மறுபுறம், EPS என்பது சந்தாதாரருக்கு மாதாந்திர அடிப்படையில் செலுத்தப்படும் ஓய்வூதியத் தொகையாகும்.
Minimum Monthly Pension: EPS இன் கீழ் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறதா என்ற கேள்வி இபிஎஃப் உறுப்பினர்களுக்கு உள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது. குறைந்தபட்ச EPS ஐ உயர்த்துவதற்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதா என்ற கேள்விக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே ஜூலை 24, 2025 அன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலளித்தார்.
- EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து அரசாங்கம் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுள்ளதாக அரசு ஒப்புக்கொண்டது.
- அரசாங்கம் அதிகரிப்பை பரிசீலித்து வருகிறதா இல்லையா?
- இதற்கு பதிலாக, “ஊழியர் ஓய்வூதிய நிதியின் கார்பஸ் (i) ஊதியத்தில் 8.33 சதவீதத்தில் நிற்றுவனத்தின் பங்களிப்பு; மற்றும் (ii) ஊதியத்தில் 1.16 சதவீத பட்ஜெட் ஆதரவு மூலம் மத்திய அரசின் பங்களிப்பு (மாதத்திற்கு ரூ.15,000/- வரை) ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றது. திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து சலுகைகளும் அத்தகைய திரட்டல்களிலிருந்து செலுத்தப்படுகின்றன.” என்று கூறப்பட்டுள்ளது.
- இது இந்த திட்டத்திற்கான வரம்பு வரை (ரூ.15,000 மாதாந்திர ஊதியம்) ஊதியத்தில் 1.16 சதவீத மத்திய அரசின் பங்களிப்பை நினைவூட்டுகிறது. இந்த பங்களிப்பு திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் இது செய்யப்படுகிறது.
- "EPS, 1995 இன் பத்தி 32 இன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்டபடி நிதி ஆண்டுதோறும் மதிப்பிடப்படுகிறது. மேலும் 31.03.2019 நிலவரப்படி நிதியின் மதிப்பீட்டின்படி, ஒரு ஆக்சுவேரியல் பற்றாக்குறை உள்ளது" என்று அரசின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அரசாங்கம் ஏற்கனவே EPS இன் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியத்தை வழங்குகிறது என்பதையும், பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் அனைத்து EPS பங்களிப்பாளர்களுக்கும் ஆண்டுதோறும் 1.16 சதவீதத்தை பங்களித்து ஆதரிக்கிறது என்பதையும் குறிக்கிறது. அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் பணவீக்கம் காரணமாக ஊழியர் சங்கங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி வரும் நிலையில், அரசாங்கம் இதுவரை இது தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை.
EPF Members: உறுப்பினர்களுக்கு EPS எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஒரு ஊழியர் பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் EPS கணக்கிடப்படுகிறது.
இதற்கான சூத்திரம்:
EPS = (ஓய்வூதிய சம்பளம் × ஓய்வூதிய சேவை ஆண்டுகள்) / 70
EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகவும் உள்ளது. ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் ரூ. 15,000 ஆகும். EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக, அல்லது குறைந்தபட்சம் ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர் சங்கங்களும் தொழிற்சங்கங்களும் கோரி வந்தாலும், அரசாங்கம் இன்னும் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ