Pensioners Latest News: பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம்தான் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கின்றது. வயதான காலத்தில் தங்கள் செலவுகளுக்கு ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தையே நம்பி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக, ஓய்வூதியத் தொகைகளைக் குறைப்பது தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
Central Government: தெளிவுபடுத்திய மத்திய அரசு
ஓய்வூதியம் குறைக்கப்படும் என்று பரவும் செய்திகள் தொடர்பான குழப்பத்தை மத்திய அரசு இதை தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் இது குறித்த ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டது. இதில், ஓய்வுக்குப் பிறகு உங்கள் ஓய்வூதியம் குறைக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணத்தை அளித்துள்ளது.
ஓய்வூதியம் குறையுமா? ஏன் இந்த குழப்பம்?
அரசு அல்லது தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பணவீக்கம் அல்லது விதி மாற்றம் காரணமாக அரசு ஓய்வூதியத்தைக் குறைக்குமா என்ற அச்சம் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். இருப்பினும், விதிப்படி அப்படி எதுவும் நடக்காது என்று மத்திய அரசு தெளிவாகக் கூறியுள்ளது. ஓய்வுக்குப் பிந்தைய ஓய்வூதியங்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிலையானதாகவே இருக்கும்.
Government Pensioners: அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் ஓய்வூதியம்
குறிப்பாக, அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் குறைக்கப்படுமா என்ற அச்சம் வீணானது. மாறாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும் அகவிலை நிவாரணத்தால் ஓய்வூதியம் சீராக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த வகையில், அதிகரிப்பு மூலம் ஓய்வூதியத் தொகை மாறுகிறதே தவிர குறைப்பு மூலம் மாறுவது இல்லை. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) அல்லது தொடர்புடைய துறைகளிடமிருந்து இந்த தெளிவுபடுத்தல் பெறப்பட்டது. மேலும் இது தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் இரண்டிற்கும் பொருந்தும்.
NPS மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் குறையுமா?
ஓய்வுக்குப் பிறகு, குறிப்பாக சந்தை நிலைமைகள் மோசமாக இருந்தால் அல்லது நிதி மேலாண்மை சிக்கலாகிவிட்டால், ஓய்வூதியங்கள் குறைக்கப்படலாம் என சில வதந்திகள் பரவின. இருப்பினும், ஓய்வூதியதாரர்களின் உரிமைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று அரசாங்கம் நேரடியாக தெளிவுபடுத்தியது. NPS இன் கீழ், ஊழியர்களின் பணம் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. மேலும் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது 60% திரும்பப் பெறலாம், மீதமுள்ள ஓய்வூதியம் வருடாந்திரம் மூலம் கிடைக்கிறது.
இங்கே எந்த குறைப்புக்கும் எந்த ஏற்பாடும் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் இன்னும் பாதுகாப்பானவர்கள், ஏனெனில் இது ஒரு நிலையான தொகையில் செயல்படுகிறது. ஓய்வூதியதாரர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது முன்னுரிமை என்று மத்திய அரசு கூறுகிறது. மேலும் எந்தவொரு கொள்கை மாற்றம் இருந்தாலும், அது பொதுவான அறிவிப்பு மூலம் செய்யப்படும்.
ஓய்வூதியதாரர்கள் இவற்றை மனதில் கொள்வது நல்லது
- பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியக் கணக்கை அவ்வப்போது செக் செய்ய வேண்டும்.
- மேலும், உங்கள் வங்கி அறிக்கையைச் சரிபார்க்கவும் அல்லது ஓய்வூதிய போர்ட்டலில் லாக் இன் செய்யவும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக உங்கள் துறையின் ஓய்வூதிய செல் அல்லது PFRDA ஹெல்ப்லைனை அழைக்கலாம்.
- பணவீக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப ஓய்வூதியதாரர்களின் வருமானத்தை அதிகரிக்க, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்படுகின்றது.
- கூடுதலாக, ஓய்வு பெறுவதற்கு முன் சேமிப்பை அதிகரிப்பது நல்லது.
- காப்பீடும் அனைவருக்கும் அவசியமானது,
- தனியார் துறை பணிகளில் உள்ளவர்கள் EPF அல்லது PPF போன்ற திட்டங்கள் மூலம் நிதி பாதுகாப்பை பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









