)
PM Kisan Samman Nidhi Yojana: இந்திய விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் 20வது தவணை சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு இது குறித்த இன்னும் பல விவரங்கள் கிடைக்கவுள்ளன. நாடாளுமன்றத்தில் விவசாயிகள் குறித்த முக்கிய அப்டே ஒன்றை மத்திய அரசு அளித்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை கொண்டு வருவது போலவே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிஎம் கிசான் நிதி உதவியையும் இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிடுவது குறித்து தற்போது பலர் பேசி வருகின்றனர். விவசாயிகளிடையே அதிகரித்து வரும் இந்த ஊகம் தொடர்பாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்த விளக்கம்
- மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை அளித்துள்ளது.
- பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் தவணைத் தொகையை இரட்டிப்பாக்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியுள்ளது.
- அதாவது பிஎம் கிசான் மூலம் விவசாயிகள் தொடர்ந்து மூன்று தவணைகளில் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவியைப் பெறுவார்கள்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா என்றால் என்ன?
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பது விவசாயிகளுக்கான இந்திய அரசின் ஒரு முக்கியத் திட்டமாகும். இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது, இது ரூ.2,000 என்ற மூன்று சம தவணைகளில் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகின்றது.
இந்தத் திட்டம் டிசம்பர் 2018 இல் தொடங்கப்பட்டு பிப்ரவரி 2019 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, அவர்களின் விவசாயச் செலவுகளை ஆதரிப்பது மற்றும் அவர்கள் கடன் கொடுப்பவர்களைச் சார்ந்திருப்பதைத் தடுப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிஎம் கிசான் 21வது தவணை எப்போது வரும்?
பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 20வது தவணையை ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து 21வது தவணை குறித்து விவசாயிகள் மத்தியில் இப்போது ஆர்வம் அதிகரித்துள்ளது. 20வது தவணைத் தொகையின் அதிகாரப்பூர்வ தேதி அரசாங்கத்தால் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் முந்தைய தவணைகளின் அட்டவணையைப் பார்க்கும்போது, 21வது தவணை 2025 நவம்பரில் வெளியிடப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 20வது தவணையை வெளியிட்டார். பிரதமர் மோடி 9.26 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு பிஎம் கிசான் சம்மான் நிதியின் தவணைத் தொகையை அனுப்பினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ