PPF முதலீடு... ஓய்வு காலத்தில் மாதம் ரூ.70,000 வரி இல்லா வருமானம் பெறலாம்

PPF: பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்ளும் நபர் மாதம் ரூ.70,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் தெளிவாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 15, 2025, 10:18 AM IST
  • PPF திட்டத்தில் செய்யப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகைகள் விபரம்.
  • மாதம் ரூ.70,000 என்ற அளவில் வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம்?
  • 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளரிடம் இருக்கும் PPF கார்பஸ்.
PPF முதலீடு... ஓய்வு காலத்தில் மாதம் ரூ.70,000 வரி இல்லா வருமானம் பெறலாம்

பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF என்பது ஓய்வூதியத்திற்காகச் சேமிக்கவும், முதலீடுகளைப் பன்முகப்படுத்தவும் உதவும் ஒரு சிறந்த சேமிப்புத் திட்டமாகும். மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த திட்டம் ஒரு நீண்ட கால பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகும். குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலம் என்பதோடு, இந்தத் திட்டத்தின 5 - 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். PPF திட்டத்தில், முதலீடு செய்யப்படும் வைப்புத்தொகை, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்தும் வருமான வரிச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

PPF: குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு

PPF கணக்கில் ஒரு வருடத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 500 ஆகும். மறுபுறம், ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்யலாம். அந்த வகையில், பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்ளும் நபர் ரூ.70,000/மாதம் வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் தெளிவாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

PPF திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ரூ.70,000 க்கு மேல் வருமானம் பெறுவது எப்படி?

PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.70,000 க்கு மேல் ஈட்ட, ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்ச முதலீட்டில் தொடங்கி 15 ஆண்டுகள் முதிர்வு காலம் வரை அதைத் தொடர வேண்டும். பின்னர், அதிகபட்ச வருமானத்திற்காக தலா 5 ஆண்டுகள் என்ற அளவில் கணக்கை நீட்டிக்கலாம். PPF திட்டத்தில் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. கூட்டு வட்டி என்பதால், பணம் எளிதில் பன்மடங்காகிறது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளரிடம் இருக்கும் PPF கார்பஸ்

15 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.22,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி வருமானம் ரூ.18,18,209 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வு தொகை ரூ.40,68,209 ஆகவும் இருக்கும். முதலீட்டாளர் 5 ஆண்டுகள் அதனை நீட்டித்து, முன்பு போலவே வருடத்திற்கு ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்யலாம். 

20 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளரிடம் இருக்கும் PPF கார்பஸ்

20 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.30,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி வருமானம் ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.66,58,288 ஆகவும் இருக்கும். இந்த கட்டத்தில், முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டித்து வருடத்திற்கு ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யும் நடைமுறையைத் தொடரலாம்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளரிடம் இருக்கும் PPF கார்பஸ்

25 ஆண்டுகளில், மொத்த முதலீடு ரூ.37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,03,08,015 ஆகவும் இருக்கும். முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க வேண்டும்.

27 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளரிடம் இருக்கும் PPF கார்பஸ்

27 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த முதலீடு ரூ.40,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.81,06,422 ஆகவும், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,21,56,422 ஆகவும் இருக்கும்.

27 ஆண்டுகள் முதலீட்டிற்குப் பிறகு எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கை

27 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கு வைத்திருப்பவர்கள் கார்பஸில் இருந்து வட்டியை எடுக்கத் தொடங்கலாம். கணக்கை நீட்டிக்கும் போது, ​​கணக்கு வைத்திருப்பவர் வருடத்திற்கு ஒரு முறை வட்டித் தொகையை எடுக்க அனுமதிக்கப்படுவார்.

முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை

தற்போதைய 7.1 சதவீத வட்டி விகிதத்தில், ஒரு வருடத்தில் வட்டி ரூ.10,13,035 ஆக இருக்கும், இது மாதத்திற்கு ரூ.71,925 க்கு சமமாக இருக்கும். இதற்கு வரி விலக்கும் உண்டு என்பதால், மாதம் ரூ.70,000 என்ற அளவிற்கும் அதிகமாக மாத வருமானம் பெற்று நிம்மதியாக வாழலாம்.

மேலும் படிக்க | ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது தான்... உங்களுக்கு கை கொடுக்கும் 7 ஃபார்முலாக்கள்

மேலும் படிக்க | Mutual Fund:ரூ.3,00,000 முதலீடு போதும்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.52,000 வருமானம் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News